மதுரையில் பிரதமர் மோடி பொதுக்கூட்ட நுழைவாயிலில் பெரியார் படம் திடீர் அகற்றம்
28 Feb 2026, 2:29 pm
<p><strong>மதுரையில் பிரதமர் மோடி பொதுக்கூட்ட நுழைவாயிலில் பெரியார் படம் திடீர் அகற்றம்</strong></p>
<p>மதுரை, பிப்.28- மார்ச் 1ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சியை முடித்து விட்டு, மாலை 2.45 மணிக்கு மேல் பிரதமர் மோடி மதுரை வருகிறார். மதுரை விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் அவர் பங்கேற்கிறார். அதனைத் தொடர்ந்து திருப்பரங்குன்றம் கோவிலுக்குச் செல்ல உள்ளார். பின்னர் மண்டேலா நகர் பகுதியில் சுமார் 150 ஏக்கர் பரப் பளவில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் மாலை 4.30 மணிக்கு நடை பெறும் பொதுக்கூட்டத்தில் அவர் கலந்துகொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி (அதிமுக), டி.டி.வி. தினகரன் (அமமுக), அன்பு மணி ராமதாஸ் (பாமக), ஜி.கே. வாசன் (தமிழ் மாநில காங்கிரஸ்), பாரிவேந்தர் (இந்திய ஜனநாயகக் கட்சி), ஜான் பாண்டியன் (தமிழக மக்கள் முன்னேற்ற கழகம்) உள் ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள். வெள்ளிக்கிழமை முதல் பொ துக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. மேடையில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகி யோரின் படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் மீனாட்சியம்மன் கோவில் மற்றும் திருப்பரங்குன்றம் கோவில் கோபுரங்களும் உள்ளன. முகப்பு நுழைவாயிலில் பெரியார் மற்றும் அண்ணா உள்ளிட்ட தலைவர்களின் படங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் திடீரென பெரியார் படம் நீக்கப்பட்டன. பெரியார் படத்தை நீக்க சொன்னது யார்? என்ற கேள்விகள் கிளம்பியுள்ளன.</p>
