குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல்'
31 May 2026, 10:53 pm
<p><strong>குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து மறியல்'</strong></p><p>உடுமலை, மே 31- பெரியபட்டி ஊராட்சியில் பொது மக்களுக்கு ஒரு மாதமாக குடிநீர் வழங் காத நிலையில், அப்பகுதி பொது மக்கள் ஞாயிறன்று சாலை மறியலில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டை தாலுகா, குடிமங்கலம் ஒன் றியத்திற்குட்பட்ட பெரியபட்டி ஊராட்சிக்கு, திருமூர்த்தி அணையிலி ருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக இப்பகுதி முழு வதும் குடிநீர் வழங்காத நிலையில், இது குறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய் துறை நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத் தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஞாயிறன்று உடுமலை - திருப்பூர் பிரதான சாலை யில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த வரு வாய் கோட்டாட்சியர் மற்றும் குடிமங்க லம் வட்டார வளர்ச்சி அலுவலர், காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, உடனடியாக இப்பகுதியில் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரு வது என்றும், இரண்டு நாட்களில் கூட்டுக்குடிநீர் விநியோக குளறுபடி களை சரி செய்து சீரான குடிநீர் விநி யோகம் செய்யப்படும் என்றும் அதிகாரி கள் உறுதியளித்தனர். அதன்பேரில், ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடை பெற்ற மறியல் முடிவுக்கு வந்தது.</p>
