மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியகுளம்
22 Dec 2025, 2:53 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியகுளம் அலுவலகத்தில், மறைந்த மூத்த தலைவர்கள் எஸ்.ஏ.ரஜாக், ஜி.முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட 16 தலைவர்களின் உருவப்படங்கள் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தலைவர்களின் படங்களைத் திறந்து வைத்து, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உரையாற்றினார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் ஏ. லாசர், தேனி மாவட்டச் செயலாளர் எம். ராமச்சந்திரன், தாலுகா செயலாளர் எம்.வி. முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.</p>
