பெரியகுளம் அருகே சூறைக்காற்றால் 100 ‘மா’ மரங்கள், 15 டன் மாங்காய்கள் சேதம்
29 May 2026, 10:17 pm
<p><strong>பெரியகுளம் அருகே சூறைக்காற்றால் 100 ‘மா’ மரங்கள், 15 டன் மாங்காய்கள் சேதம்</strong></p><p>தேனி ,மே.29- பெரியகுளத்தில் வியா ழக்கிழமை மாலை சூறைக் காற்றுடன் பெய்த கனமழை யால் 100 - க்கு மேற்பட்ட மா மரங்கள், 15 டன் எடை கொண்ட மாங்காய்கள் சேத மடைந்துள்ளன, தேனி மாவட்டம், பெரிய குளம், லட்சுமிபுரம், கோ யில்காடு, சோத்துப்பாறை, கல்லாறு, கீழவடகரை, கும் பக்கரை உள்ளிட்ட பகுதிக ளில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் கல்லாமாய், செந் தூரம், கலையப்பாடி உள்பட பல்வேறு ரக மாமரங்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்த மரங்கள் டிசம்பர், ஜனவரி மாதத்தில் பூ உருவாகி, மார்ச் முதல் ஏப்ரல் காய் வெளியேறி, மே முதல் ஜூலை மாதம் வரை பழங் கள் அறுவடைக்கு வரு கின்றன. இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மாலை கீழ வடகரை, கும்பக்கரை மற்றும் தாமரைக்குளம் பகு தியில் இடி, சூறைக் காற்றுடன் மழை பெய் தது. மேலும், பலத்த சூறைக் ்கற்றால் அந்த பகுதியில் 50 ஆண்டுகளை கடந்த பழமை யான 100-க்கும் மேற்பட்ட மா மரங்கள் சேதமடைந்துள் ளது. மேலும், சுமார் 15 டன்னு க்கு மேலான மாங்காய்கள் கீழே விழுந்து சேதமடைந் துள்ளன. இதனால் விவசாயி கள் வேதனையடைந்துள் ளனர்.</p>
