பெரியகரம் பகுதியில் தரமற்ற தார் சாலை பொதுமக்கள் போராட்டம்
7 May 2026, 2:28 am

பெரியகரம் பகுதியில் தரமற்ற தார் சாலை பொதுமக்கள் போராட்டம்

திருப்பத்தூர், மே 6- திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் பெரிய கரம் ஊராட்சியில் ரூ.57 லட்சம் மதிப்பீட் டில் பெரியகரம் முதல் முத்துராம்பள்ளம் சாலை வரை புதிதாக தார்சாலை போட ஒப்பந்தம் விடப் பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தார்சாலை தரமற்றதாக இருப்பதாகவும் துறை சார்ந்த அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் பொது மக்களின் கோரிக்கையை ஏற்க மறுத்து சாலை முழுவதுமாக போடப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் செவ்வாயன்று போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

அப்போது அதிகாரிகள் அளித்த வாக்குறுதியை ஏற்று பொதுமக்கள் போரா ட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.