தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாழ்வாதாரப் போராட்டத்தில் மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள்: பேராவூரணி, பட்டுக்கோட்டையில் தனி மணல் குவாரி அமைக்க கோரிக்கை

19 Jul 2026, 10:27 pm
வாழ்வாதாரப் போராட்டத்தில் மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள்:  பேராவூரணி, பட்டுக்கோட்டையில் தனி மணல் குவாரி அமைக்க கோரிக்கை

வாழ்வாதாரப் போராட்டத்தில் மணல் மாட்டு வண்டித் தொழிலாளர்கள்: பேராவூரணி, பட்டுக்கோட்டையில் தனி மணல் குவாரி அமைக்க கோரிக்கை

தஞ்சாவூர், ஜூலை 19- தஞ்சாவூர் மாவட்டத்தின் பேராவூ ரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில், மணல் தட்டுப்பாடு என்பது வெறும் கட்டுமானப் பிரச்சனை மட்டுமல்ல, அது நூற்றுக்கணக்கான ஏழைத் தொழிலாளர்களின் வாழ்வாதா ரத்தைப் பறிக்கும் ஒரு சமூகப் பெருந்துயராக மாறியுள்ளது. தங்களின் பாரம்பரியத் தொழிலான மணல் அள்ளும் பணியைத் தொடர முடியாமல், காவல் நிலையங்களும் நீதிமன்றங்க ளுமாகத் தொழிலாளர்கள் அலையும் அவலம் நீடித்து வருகிறது.

தொழிலாளர்களின் துயரம்: சட்டப்போராட்டங்களால் சிதையும் குடும்பங்கள்

பல தலைமுறைகளாக மாட்டு வண்டி மூலம் மணல் அள்ளி, அதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் குடும்பம் நடத்தி வரும் தொழிலாளர்கள், தற்போது மிகுந்த நெருக்கடியில் உள்ளனர். மணல் குவாரிகள் முறைப்படி இயங்காத சூழலில், வயிற்றுப் பிழைப்பிற்காக மணல் அள்ளும் தொழிலாளர்களைக் காவல்துறை கைது செய்வதும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதும் தொடர்கதையாகிவிட்டது. இதுகுறித்து தொழிலாளர்கள் வேதனையுடன் கூறுகையில், “மாட்டு வண்டிகளைப் பறிமுதல் செய்து காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கிறார்கள். வண்டிகள் வெயிலும் மழையிலும் துருப்பிடித்துப் பாழா கின்றன. நாங்கள் வெறும் தொழிலாளர்கள் தானே தவிர, மணல் கடத்தல்காரர்கள் அல்ல. வழக்குகளால் நீதிமன்றங்களுக்குச் சென்று அலையும் சூழலால், எங்களது அன்றாட வேலை பாதிக்கப்பட்டு குடும்பங்கள் வறுமையில் வாடுகின்றன. சில சமயங்களில் சிறைக்குச் செல்லும் நிலை ஏற்படுவதால், எங்களை நம்பியுள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களின் நிலை சொல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. வண்டி மாடுகளைப் பராமரிப்பதிலும் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது” எனத் தெரிவிக்கின்றனர்.

உள்ளூர் மக்களின் எதிர்பார்ப்பு: குவாரிகள் எங்கே?

பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை பகுதிகளில் உள்ள சின்ன ஆவுடையார் கோவில், கட்டையங்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாட்டு வண்டி தொழி லாளர்கள் பயன்பெறும் வகையில் மணல் குவாரிகள் திறக்கப்பட வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.

சட்டமன்ற உறுப்பினர்களிடம் முறையீடு

இந்த அவல நிலைக்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரி, தொழிலா ளர்கள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என். அசோக்குமார் மற்றும் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், “எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க, மாட்டு வண்டிகளுக்கு எனத் தனியாகப் பிரத்யேக மணல் குவாரிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இது குறித்து தாங்கள் சட்டமன்றத்தில் குரல் எழுப்பி, அரசு உரிய நடவடிக்கை எடுக்க ஆவன செய்ய வேண்டும்’’ என வலியுறுத்தியுள்ளனர். அரசின் கவனத்திற்கு... கட்டுமானத் துறை முடங்கியிருப்பதாலும், மணல் தட்டுப்பாட்டால் விலை விண்ணைத் தொடுவதாலும் சாமானிய மக்கள் வீடு கட்டும் கனவை ஒத்திவைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சாதாரண மக்கள் அரசு ஒதுக்கீடு வீடுகளை கட்டவும், அரசுக் கட்டடங்கள், பள்ளிக் கட்டடங்கள் கட்டவும் மணல் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். மணல் மாட்டு வண்டித் தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தையும், சாமானிய மக்களின் வீட்டுக் கனவையும் கருத்தில் கொண்டு, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக அரசும், மாவட்ட நிர்வாக மும், மாவட்ட காவல்துறையும் மனிதாபிமான அடிப்படையில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும். மாட்டு வண்டி தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, உரிய விதிமுறைகளுடன் கூடிய மணல் குவாரிகளை அமைத்துத் தருவதே, இவர்களின் துயரத்திற்குத் தீர்வாக அமையும். மாவட்ட நிர்வாகமும், மக்கள் பிரதிநிதிகளும் இதில் உடனடியாகத் தலையிட்டு, தொழி லாளர்களின் கண்ணீரைத் துடைக்க முன்வருவார்களா? என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும். - எஸ்.ஜகுபர்அலி தஞ்சாவூர்

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.