முந்தய பக்கம்

பெரம்பூர்-புரசைவாக்கம் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி தாமதம்

12 May 2026, 1:49 am
பெரம்பூர்-புரசைவாக்கம்  மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி தாமதம்
<p><strong>பெரம்பூர்-புரசைவாக்கம் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி தாமதம் </strong></p><p>சென்னை, மே 11- சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்டத் திட்டத்தில், பெரம்பூர் பேரக்ஸ் முதல் புரசைவாக்கம் வரையி லான 1.2 கி.மீ. தூர சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. புரசைவாக்கம் சந்திப்பில் டிபிஎம் இயந்திரத்தை வெளியே எடுப்பதற்கான ‘ஷாஃப்ட்’ எனப்படும் செங்குத்து கட்டுமான அமைப்பை உருவாக்குவதில் சவால்கள் நீடிக்கின்றன. குறிப்பாக, அந்தப் பகுதியில் பூமிக்கடியில் இருந்த குடிநீர் வாரியக் குழாய்கள், பாதாளச் சாக்கடை இணைப்புகள் மற்றும் மின்சாரக் கேபிள்களை மாற்றி அமைப்பதில் அதிக காலதாமதம் ஏற்பட்டதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 2025 செப்டம்பர் மாதம் தொடங்கிய இப்பணி யில், இதுவரை 65 சதவீத சுரங்கப் பணிகள் நிறை வடைந்துள்ளன. தற்போது நிலத்தடிப் பயன்பாட்டு வசதிகள் மாற்றியமைக்கப்பட்டு, ஷாஃப்ட் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் டிபிஎம் இயந்திரம் புரசைவாக்கத்தை வந்தடையும் என்றும், நவம்பர் இறுதிக்குள் இந்த 1.2 கி.மீ. சுரங்கப்பாதை பணி முழுமையாக முடிவடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தடம் மாதவரம் முதல் சிப்காட் வரையிலான 3-வது வழித்தடத்தின் ஒரு பகுதியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram