தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெரம்பூரில் பன்நோக்கு மருத்துவமனை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

20 Aug 2026, 12:49 am
பெரம்பூரில் பன்நோக்கு மருத்துவமனை:  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

பெரம்பூரில் பன்நோக்கு மருத்துவமனை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு

சென்னை, ஆக. 19-வடசென்னை மக்களின் உயர் சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனை பெரம்பூரில் அமைப்பது என்ற தமிழ்நாடு அரசின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்ட குழு வரவேற்றுள்ளது.

இதுகுறித்து மாவட்டச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொடுங்கையூர் குப்பை மேட்டால் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் தோல் மற்றும் சுவாச நோயால் பாதிக்கப்பட்டு துன்புற்று வருகின்றனர். அதேபோல் வடசென்னையில் ரசாயனம், பெட்ரோலியம் உள்ளிட்ட தொழிற்சாலை கள் மற்றும் பட்டறை தொழிற்சாலை மாசால் பாதிக்கப்படும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கு சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

வடசென்னை மாவட்ட குடியிருப்போர் நல சங்க கூட்டமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளும் தொழிற்சார்ந்த நோய்கள் மற்றும் குப்பை வளாகத்தால் ஏற்படும் தோல் மற்றும் சுவாச நோய்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட நோய்களுக்கான மருத்துவமனை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு முன் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு பெரம்பூரில் உயர் சிகிச்சைக்கான 400 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை அமைப்பது என முடிவு செய்துள்ளது வர வேற்கத்தக்கது. இந்த மருத்துவமனையில் தொழிற்சாலை சார்ந்த மற்றும் குப்பைமேட்டால் ஏற்படுகிற நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு முக்கியத்து வம் அளித்து அதற்கான துறை

களை உருவாக்கி இந் நோய்களால் பாதிக்கப்படு கிற அனைத்து பகுதி மக்களுக்கும் மருத்துவ வசதிகள் இலவசமாக கிடைப்பதற்கு அரசு இந்த பன்நோக்கு உயர் சிகிச்சை சிறப்பு மருத்துவ

மனையை பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வடசென்னை கூட்டமைப்பும் வரவேற்பு

பெரம்பூரில் 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 400 படுக்கைகள் கொண்ட உலகத் தரத்திலான பன்முக உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பை, வடசென்னை குடியிருப்போர் நலச்

சங்கங்களின் கூட்டமைப்பு வர வேற்றுள்ளது.

இதுகுறித்து தலைவர் டி.கே.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடசென்னை மக்களின் நீண்டகால முக்கியக் கோரிக்கைகளில் ஒன்றாக, பெரம்பூரில் உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதை கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது என கூறியுள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.