ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்
9 May 2026, 12:40 am

ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக். பள்ளி மாவட்ட அளவில் சிறப்பிடம்

பெரம்பலூர், மே 8- பெரம்பலூர் மாவட்டத்தில் 3,742 மாணவர்களும், 3,464 மாணவிகளும் என மொத்தம் 7,206 மாணவ - மாணவிகள் தேர்வெழுதினர்.

இதில், 3,470 மாணவர்கள் மற்றும் 3,342 மாணவிகள் என மொத்தம் 6,812 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் 92.73 சதவீதமும், மாணவிகள் 96.48 சதவீதமும் பெற்று பெரம்பலூர் மாவட்டம் 94.53 சதவீதத்துடன் மாநில அளவில் 23 ஆம் இடம்பெற்றுள்ளது.

ரஞ்சன்குடிகோட்டை, நக்கசேலம், கவுள்பாளையம், எளம்பலூர், மருவத்தூர் மற்றும் பெரம்பலூர் அரசு மாதிரிப்பள்ளி என 6 அரசு மேல்நிலைப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ - மாணவிகளுக்கும், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும், தேர்வில் வெற்றி வாய்ப்பை இழந்த மாணவ - மாணவிகள் தன்னம்பிக்கையுடன் துணைத்தேர்வை எதிர்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் முதல் மூன்று இடங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதில் மாணவர் கோகுல் 594 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

மாவட்ட அளவில் அதிகளவில் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவன தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, இனிப்பு மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினர்.