தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

14 May 2026, 9:59 pm
குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை  பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

பெரம்பலூர், மே 14- பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், கீழப்புலி யூர் ஊராட்சி சிறுகுடல் கிராமத்தில் சுமார் 2,000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் குடிதண்ணீர் அதிக உப்பு தன்மை கொண்டுள்ளதால், சிறுநீரகப் பிரச்சனை.

சிறுநீரகத்தில் கல், உடல் உபாதைகள் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தன. இதனால், கிராம மக்கள் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் பேரில், மூன்று மாதங்களுக்கு முன்பு அப்போதைய போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், மாவட்ட கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதி திட்டத்தின் கீழ், ரூ.9,15,000 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு 20 லிட்டர் குடிதண்ணீர் ரூ.5 என கிராம மக்களுக்கு வினியாகம் செய்யப்பட்டு வந்தது.

ஆனால் இந்த சுத்திக ரிப்பு நிலையம் தொடங்கப்பட்டு சுமார் 10 நாட்களுக்குள் மூடு விழா கண்டது.

அவசர அவசரமாக அமைக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு குடிநீர் நிலையம் செயல்ப டுத்தப்படாமல் கிடப்பில் போ டப்பட்டுள்ளதால், கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்கவில்லை.

இதனால் மீண்டும் சுத்தமான குடிநீர் இல்லாமல் அவதிப்படும் நிலை எழுந்துள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கருத்தில் கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட இந்த சுத்திகரிப்பு நிலையத்தை மீண்டும் திறந்து சரிவர பராமரித்து கிராம மக்களுக்கு தண்ணீர் விநியோகிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.