தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை - தர்ணா
16 Jun 2026, 11:06 pm
<p><strong>தூய்மைப் பணியாளர்கள் நகராட்சி அலுவலகத்தில் முற்றுகை - தர்ணா</strong></p><p>பெரம்பலூர், ஜுன் 16- பெரம்பலூர் நகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் திங்கட்கிழமை பணி புறக்கணிப்பு செய்து நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள், வாகன இயக்குநர்கள், கொசு மருந்து அடிப்பவர் என மொத்தம் 500-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒப்பந்ததாரர் மூலம் பணி வழங்கப்பட்டு வருகிறது. இதில் இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட கூலி வழங்க வேண்டும். பி.எப், இ.எப் பிடித்தம் முறையாக செய்ய வேண்டும். மரியாதையுடன் வழி நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், தூய்மைப் பணியாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களது கோரிக்கைகள் பற்றி கேட்டறிந்தார். மேலும் கோரிக்கைகள் குறித்து சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.</p>
