உலக பூமராங் சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளி பதக்கம் வென்ற பெரம்பலூர் வீரர்
7 Aug 2026, 11:34 pm

உலக பூமராங் சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளி பதக்கம் வென்ற பெரம்பலூர் வீரர்

பெரம்பலூர், ஆக. 7- உலக பூமராங் சாம்பியன்ஷிப் என்பது சர்வதேச பெடரேஷன் ஆஃப் பூமராங் அசோசியேஷன் அமைப்பால் நடத்தப்படும் உலகளாவிய விளையாட்டுப் போட்டியாகும். 2026 ஆம் ஆண்டுக்கான உலக பூமராங் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேசியாவின் பண்டுங் நகரில் கடந்த ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதல் ஆக. 5 ஆம் தேதி வரை நடைபெற்றது.

இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர், ஜெர்மனி உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வீரர். வீராங்கனைகள் விளையாடினர். இதில் துல்லியம், வேகம், வெகுதூரம் வீசுதல் மற்றும் பிடிக்கும் திறன்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தனி நபர் மற்றும் அணிகளுக்கான போட்டிகள் நடைபெற்றது.

இந்த விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் “தாங்கும் திறன்’’ (Endurance) தனிநபர் போட்டி பிரிவில் இரண்டாம் இடத்தில் வெற்றிபெற்று வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

அதுமட்டுமல்லாமல், சர்வதேச போட்டிகளில் இந்திய வீரரின் முந்தைய அதிகபட்சம் 41 பிடித்தல் (catches) என்ற சாதனையை முறியடித்து, 46 பிடித்து பதிவு செய்து புதிய இந்திய சர்வதேச சாதனையையும் படைத்துள்ளார்.

உலக பூமராங் சாம்பியன்ஷிப் வரலாற்றில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.