36 மாதங்களாக ஊதிய உயர்வு முடக்கம் பெரம்பலூரில் 10 நாட்களாக நீடிக்கும் எம்ஆர்எப் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
12 Jul 2026, 9:05 pm

36 மாதங்களாக ஊதிய உயர்வு முடக்கம் பெரம்பலூரில் 10 நாட்களாக நீடிக்கும் எம்ஆர்எப் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்

தமிழக அரசு உடனே தலையிட சிஐடியு வலியுறுத்தல்

சென்னை பெரம்பலூர் எம்ஆர்எப் (MRF) டயர் தொழிற்சாலையில் கடந்த 10 நாட்களாகத் தொடரும் தொழி லாளர்களின் நியாயமான வேலை நிறுத்தப் போராட்டத்திற்குத் தீர்வு காண தமிழக அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் வலியுறுத்தியுள்ளார். காவல்துறையின் தொழிலாளர் விரோதப் போக்கைக் கண்டித் துள்ள அவர், அரசு உரிய நட வடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் மாநிலத் தழுவிய அளவில் தீவிரமடையும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

36 மாதங்களாக மறுக்கப்படும் ஊதிய உயர்வு

பெரம்பலூர் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையில், கடந்த 1.1.2024 முதல் சிஐடியு தொழிற்சங்கம் சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. சங்கம் உருவானது முதலே தொழிலாளர் களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பொதுக் கோரிக்கைகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த நிர்வா கத்திற்கு வேண்டுகோள் விடுக்கப் பட்டது. ஆனால், நிர்வாகம் இதனை மறுத்து, சட்டப்படி அமைக்கப்பட்ட தொழிற்சங்கத்தையே கலைப்ப தற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. திருச்சி மற்றும் சென்னையில் தொழிலாளர் துறை அதிகாரிகள் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்ட முறை பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகும் கூட, ஊதிய உயர்வு வழங்க நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. நிர்வாகம் கேட்ட உற்பத்தி இலக்கைத் தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டு, அதன்படி செய்தும் வருகிற பின்னணியிலும், ஊதிய உயர்வை பேச்சுவார்த்தையில் வெளிப்ப டுத்துவதற்குக் கூட நிர்வாகம் மறுப் பது உழைப்புச் சுரண்டலாகும் என, அவர் தமது அறிக்கையில் சாடி யுள்ளார்.

கூடுதல் உற்பத்தியும் கொள்ளை லாபமும்

சட்டத்திற்குப் புறம்பாக உற்பத்தியைத் தொழிலாளர்கள் மேல் திணித்து நிர்வாகம் கொள்ளை லாபம் ஈட்டி வருகிறது. தொழி லாளர் துறை அதிகாரிகளின் அறி வுரையையும் நிர்வாகம் ஏற்க மறுத்துவிட்டது. இதனால் கடந்த 36 மாதங்களாகச் சம்பள உயர்வு இல்லாமல், ஏறிய விலைவாசி உயர்வைத் தாக்குப் பிடிக்க முடியா மல் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே வழங்கிய உற்பத்தி இலக்கை விடவும் தற்போது பல மடங்கு கூடுதல் உற்பத்தியைத் தொழிலாளர்கள் வழங்கிய பின்னணியிலும், நிர்வாகத்தின் தொழிலாளர் விரோதப் போக்கு நீடிக்கிறது. இதன் காரணமாக, கடந்த ஜூலை 3 முதல் 700-க்கும் அதிக மான தொழிலாளர்கள் பங்கேற்று ள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டம் 10 தினங்களாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழிலாளர் துறை முன்பு மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிர்வாகம், “வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டால் மட்டுமே பேசுவோம்” என அடம் பிடித்து வருகிறது. வேலைநிறுத்தம் நீடிப்பதற்கு நிர்வாகத்தின் அடமும் ஆணவமும் மட்டுமே காரணமாகும் என்றும் சிஐடியு அறிக்கை விவரித்துள்ளது.

காவல்துறையின் தொழிலாளர் விரோதப் போக்கு

மற்றொருபுறம், தொழிலாளர்கள் ஒன்று கூடி தங்களது போராட்டத்தைத் தொடர்வதற்கு எதிராக நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது. அந்த வழக்கில், ஆலையிலிருந்து 300 மீட்டர் தொலைவில் தொழிலாளர்கள் கூடிக்கொள்ளலாம் என்கிற உத்தரவை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. நீதிமன்றமே இவ்வாறு அனுமதித்திருந்தும், தமிழக காவல்துறை ஆட்சி மாறினாலும் தொழிலாளர் போராட்டத்தை ஓரிடத்தில் கூடி நடத்துவதற்கு அனுமதி மறுத்து வருகிறது. இது சட்டவிரோதமானதும், தொழிற்சங்க விரோத நிர்வாகத்திற்குத் துணை போகும் செயலுமாகும். காவல்துறையின் இத்தகைய போக்கை சிஐடியு வன்மையாகக் கண்டிக்கிறது; எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, தொழிலாளர்கள் கூடிப் போராட அனுமதி மறுக்கும் காவல்துறை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த கால செயல்பாடுகளில் இருந்து மாற்றம் தேவை. தொழிலாளர்களின் ஜனநாயக உரிமையையும், வேலைநிறுத்த உரிமையையும் பறிப்பதற்கு காவல்துறைக்கு எத்தகைய அதிகாரமும் இல்லை என்பதை அரசு உடனடியாகச் சுட்டிக்காட்ட வேண்டும். தொழிலாளர் துறை அமைச்சர், போராடும் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கையை உணர்ந்து, இப்பிரச்சனையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிஐடியு மாநிலக் குழு வலியுறுத்துகிறது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஜூலை 17 திருச்சியில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

பத்து நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக, சிஐடியு பெரம்பலூர் மாவட்டக்குழு ஏற்கனவே இரண்டு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு நியாயமான தீர்வை அடைவதற்கு உதவவில்லை என்பதுடன், இது தொழிலாளர்கள் மீது அவருக்கு இருக்கும் அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது. இதன் தொடர்ச்சியாக, வரும் ஜூலை 17 அன்று திருச்சி மாநகரில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு, திருச்சி மாவட்ட சிஐடியு சார்பில் வேலைநிறுத்தம் செய்து வரும் எம்ஆர்எப் தொழிலாளர்களுக்கு ஆதரவாக மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநில அரசும் தொழிலாளர் துறையும் உடனடியாக வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கு நியாயம் வழங்கவில்லை எனில், மாநிலம் தழுவிய போராட்டத்திற்குச் செல்ல நேரிடும் என்று அந்த அறிக்கையில் சிஐடியு எச்சரித்துள்ளது.

எம்.ஆர்.எப் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் மாபெரும் ஆர்ப்பாட்டம்

எம்.ஆர்.எப் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் சிபிஎம் பெரம்பலூர் மாவட்டக்குழு சார்பில் பாடாலூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். வட்டக்குழு உறுப்பினர்கள் தேவராஜ், பழனி, குமார் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரங்கநாதன், கலையரசி, அகஸ்டின் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 36 மாத ஊதிய நிலுவைத்தொகை, பயிற்சி முடித்தோரை நிரந்த ரப்படுத்துதல், ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்டு சட்டவிரோத உற்பத்தி நடத்து வதை கைவிடுதல் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் வேப்பந்தட்டை ஒன்றியச் செயலாளர் சக்திவேல், சங்க நிர்வாகிகள் ராஜசேகர், கிருஷ்ணசாமி, சந்திரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றனர்.