முந்தய பக்கம்

மியாவாக்கி முறையில் 2 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு

14 May 2026, 9:57 pm
மியாவாக்கி முறையில்  2 ஏக்கர் பரப்பளவில்  20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு
<p><strong>மியாவாக்கி முறையில் 2 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு</strong></p><p>பெரம்பலூர் மே 14- பெரம்பலூர் மாவட்டத்தை பசுமை போர்வை போர்த்தப்பட்ட மாவட்டமாக உருவாக்கிடும் முயற்சியில், மியாவாக்கி மரம் வளர்ப்பு திட்டத்தில், இதுவரை சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இன்றைய தினம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட பாடாலூரில், சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள அரசுக்குச் சொந்தமான நிலத்தில், மியாவாக்கி முறையில் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 2 ஏக்கர் பரப்பளவில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில், சுமார் 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram