பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
10 Aug 2026, 12:00 am

பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஆக. 9- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் சார்பில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், அனுக்கூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சொசைட்டி முன்பு, மாவட்டத் துணைத் தலைவர் தோழர் செங்கமலை தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் சத்திய சீலன், சங்கத்தின் மாவட்டச் செயலாளர் க.முத்து உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி உரை ஆற்றினார்.

இதில் பால் லிட்டர் 1-க்கு ரூ.10 விலை உயர்த்தி ரூ.45 ஆக வழங்க வேண்டும். ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.10 உயர்த்தி கொடுக்க வேண்டும். 50 சதவீதம் மானியத்தில் மாட்டு தீவனம், மாட்டு கொட்டகை அமைத்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.