பெரம்பலூரில் படத்திறப்பு நிகழ்வுகள் மறைந்த தோழர்களுக்கு பெ.சண்முகம் புகழஞ்சலி!
23 Jul 2026, 9:33 pm
<p><strong>பெரம்பலூரில் படத்திறப்பு நிகழ்வுகள் மறைந்த தோழர்களுக்கு பெ.சண்முகம் புகழஞ்சலி!</strong></p><p>பெரம்பலூர், ஜூலை 23 - பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த நிர்வா கிகளின் படத்திறப்பு மற்றும் புகழஞ்சலிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூரில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, கட்சியின் மாவட்டச் செய லாளர் பெ.ரமேஷ் தலைமை வகித்தார். கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லத்துரை, எ.கே.ராஜேந்திரன், குன்னம் வட்டச் செயலாளர் வி.செல்ல முத்து, அலுவலகச் செயலாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் சமீபத்தில் இயற்கை எய்திய நிலையில், அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கலந்துகொண்டு என்.செல்லத்துரையின் படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். தொடர்ந்து, மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் (எ.கே.ராஜேந்திரன் படம்), மாநிலக் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் எஸ்.ஸ்ரீதர் (வி.செல்ல முத்து படம்), மாநிலக் குழு உறுப்பி னர் சாமி.நடராஜன் (ஆர்.இளங்கோவன் படம்) ஆகியோர் படங்களைத் திறந்து வைத்து புகழஞ்சலி உரையாற்றினர். இக்கூட்டத்தில் கட்சியின் அரியலூர் மாவட்டச் செயலாளர் இளங்கோவன், சிபிஐ மாவட்டச் செயலாளர் ஜெயராமன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் அகஸ்டின், கலையரசி ரெங்கநாதன், கருணாகரன், ஒன்றியச் செயலாளர்கள் பெரியசாமி, சக்திவேல், பாஸ்கரன், சத்ய சீலன், கமிட்டி செயலாளர் பாலகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.</p>
