முந்தய பக்கம்

வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு

5 Jun 2026, 10:38 pm
வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு
<p><strong>வளர்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியர் ஆய்வு </strong></p><p>பெரம்பலூர், ஜுன் 5- பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டத்தி ற்குட்பட்ட கூத்தூர், சாத்தனூர், ஜமீன் ஆத்தூர் ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், ரூ.13.93 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்ற நிலை குறித்து, மாவட்ட ஆட்சியர் ஷரண்யா அரி வியாழக்கிழமை ஆய்வு செய்தார். ஆலத்தூர் வட்டத்திற்கு ட்பட்ட ஜமீன் ஆத்தூர் ஊராட்சியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.47 கோடி மதிப்பீட்டில் 2.6 கி.மீ தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணி, கூத்தூர் ஊராட்சியில் மாநில சிறப்பு திட்டத்தின் (2025-2026) கீழ் ரூ.8.25 கோடி மதிப்பீட்டில் கூத்தூர் - கூடலூர் இடையே மருதையாற்றின் குறுக்கே 116 மீட்டர் நீளமும், 8.40 மீட்டர் அகலத்துடன் 5 தூண்களுடன் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணி மற்றும் சாத்தனூர் ஊராட்சியில் ரூ.3.21 கோடி மதிப்பீட்டில் கொளக்காநத்தம் - சாத்தனூர் இடையே மருதையாற்றின் குறுக்கே 43.05 மீட்டர் நீளமும், 8.71 மீட்டர் அகலமும், 4 தூண்களுடன் கூடிய உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி என ரூ.11.46 கோடி மதிப்பீட்டில் 2 புதிய பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், பாலத்தின் தூண்கள் அமைக்கும் பணிகள், தரம் மற்றும் அடித்தளக் கட்டுமானப் பணிகள் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வுகளின் போது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், ஆலத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கீதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram