தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் வேலைவாய்ப்புப் பதிவு, புதுப்பித்தல் பெரம்பலூர் ஆட்சியர் ந.மிருணாளினி தகவல்
15 May 2026, 10:56 pm
<p><strong>தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் வேலைவாய்ப்புப் பதிவு, புதுப்பித்தல் பெரம்பலூர் ஆட்சியர் ந.மிருணாளினி தகவல்</strong></p><p>பெரம்பலூர், மே 15- வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை, கூடுதல் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் இணைய தளத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் எந்தவித கட்டணமின்றி வழங்கப்படுகிறது. மேலும், அனைத்து சேவைகளையும் www.tnvelaivaaippu.gov.in நேரலையில் இணையதளம் வாயிலாகவே மனுதாரர்கள் அளவில் செய்துகொள்ள வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் எவரும் இதுபோன்ற போலி விளம்பரங்களையோ அல்லது இடைத்தரகர்களையோ நம்பி தனிப்பட்ட விவரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. பெரம்பலூர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தை நேரடியாகவோ அல்லது 04328-296352 மற்றும் 9499055913 என்ற தொலைபேசி வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.</p>
