குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
3 Nov 2026, 10:10 pm

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரம்பலூர், நவ.3 -பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், குழந்தைகள் நலன்மற்றும் சிறப்பு சேவைகள் துறை - மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக குழந்தைகள் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் ஆகியவற்றிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் ப.அப்துல் ராசிக் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்குவட்டாரங்களிலும் சாலை வாகன விழிப்புணர்வு மற்றும் கலை குழு மூலம் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள், போக்சோ தொடர்பான விழிப்புணர்வு, குழுந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு, குழந்தை தத்தெடுப்பு தொடர்பான விழிப்புணர்வு, குழந்தைகள் உதவி எண் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு தொடர்பாக வாசகங்கள் நான்கு விழிப்புணர்வு வாகனத்தின் மூலம் 4 நாட்களுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் ஒலிப்பெருக்கி வாயிலாக அறிவிப்பு செய்யப்படவுள்ளது.இந்த விழிப்புணர்வு வாகனத்துடன் கலை குழுவினரும் சென்று கிராமிய வீதி நாடக கலை நிகழ்ச்சிகள் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவுள்ளனர்.

இந்நிகழ்வில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் சீ.ப.பிரியா, குழந்தைகள் நலக் குழு தலைவர் இந்திரா காந்தி, இளைஞர் நீதி குழும உறுப்பினர் சிவகுமார், குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் ஜீவானந்தம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் கலந்து கொண்டனர்.