மக்கள் தலைவர் தோழர் ஜீவா: ஒரு சகாப்தம்! - ஆர்.ராஜா
17 Jan 2026, 2:42 pm
<p><strong>மக்கள் தலைவர் தோழர் ஜீவா: ஒரு சகாப்தம்!</strong></p>
<p>இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தின் ஈடு இணை யற்ற தலைவர் தோழர் ப. ஜீவானந்தம் (1907-1963) அவர்க ளின் நினைவு நாள் இன்று. ஏறத்தாழ 40 ஆண்டுக்காலப் பொது வாழ்க்கை யில் 10 ஆண்டுகளைச் சிறையிலேயே கழித்த தியாகச் செம்மல் அவர். நாகர்கோவில் அருகே பூதப் பாண்டியில் பிறந்த ஜீவா, காந்திய வாதியாகத் தொடங்கி, சுயமரியாதை இயக்க வீரராகப் பரிணமித்து, இறு தியில் மார்க்சியப் பேராசானாக உயர் ந்தார். வைக்கம் சத்தியாக்கிரகம், சுசீந்திரம் தீண்டாமை ஒழிப்பு எனப் பல போராட்டங்களில் முன்னின்றவர். 1936-இல் திருச்சியில் ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’யைத் தொடங்கி, சமதர்மக் கருத்துக்களைத் தமிழ் மண்ணில் விதைத்தார். சிறைவாசம் அவரை முழுமையான கம்யூ னிஸ்டாக மாற்றியது. ஜீவா ஒரு சிறந்த இலக்கிய வாதி; பாரதியின் வழியில் பாமரர்க ளுக்காகப் பாடியவர். மார்க்சியத் தத்துவங்களைத் தமிழில் கொண்டு வரப் பல கலைச்சொற்களை உரு வாக்கியதோடு, ‘சோசலிசச் சரித்தி ரம்’ போன்ற முன்னோடி நூல்களை யும் எழுதினார். ‘ஜனசக்தி’ நாளிதழ் மற்றும் ‘தாமரை’ இலக்கிய இதழ் மூலம் கொள்கை பரப்பினார். 1961-இல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ கண்டு, கலைத்துறையில் புரட்சிகர மாற்றங்களை ஏற்படுத்தினார். 1952 முதல் 1957 வரை வண்ணா ரப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக மிகச்சிறந்த மக்கள் சேவையாற்றினார். எதிரணியில் இருந்த காமராச ராலேயே பெரிதும் மதிக்கப்பட்டவர் ஜீவா. இந்திய விடுதலைக்குப் பிறகு உடுத்த மாற்று உடை கூட இல்லாத வறுமை நிலையிலும், தனது லட்சியப் பாதையிலிருந்து அவர் பின்வாங்கவில்லை. வறுமையிலும் கொள்கை குன்றாத நேர்மையாளர். “தமிழ் மணம் பரப்ப” உழைத்த அந்தத் தியாகத் தலைவரின் புகழ் என்றும் மறையாது. - ஆர்.ராஜா, திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர், சிபிஐ(எம்)</p>
