உரிமைகளை அடகு வைத்த அதிமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்! தென்காசி, விருதுநகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்
5 Apr 2026, 3:36 pm
<p><strong>உரிமைகளை அடகு வைத்த அதிமுகவிற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்! தென்காசி, விருதுநகரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்</strong></p>
<p>சங்கரன்கோவில் /விருதுநகர், ஏப். 5 - தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையைத் திணிக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் முயற்சி ஒரு போதும் பலிக்காது என்றும், மாநில உரிமைகளை அடகு வைத்த அ.தி.மு.க.விற்கு மக்கள் இந்தத் தேர்தலில் முற்றுப்புள்ளி வைப்பா ர்கள் என்றும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழங்கினார். விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டங்களில் உரையாற்றிய அவர், ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்ததுடன், அ.தி.மு.க.வின் துரோக அரசியலையும் அம்பலப் படுத்தினார். மும்மொழிக் கொள்கையும் பாஜகவின் வஞ்சகமும் சங்கரன்கோவில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய முத லமைச்சர், பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகளில் உள்ள ஆபத்து களைச் சுட்டிக்காட்டினார். “தமிழ் நாட்டில் மும்மொழிக் கொள்கை யை அமல்படுத்துவோம் என்று சொல்லி பிரச்சாரம் செய்யும் தைரி யம் என்.டி.ஏ-வுக்கு இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். இந்தித் திணிப்பு மூலம் தமிழர்களின் அடை யாளத்தை அழிக்க நினைக்கும் பாஜகவின் சதித்திட்டத்திற்குத் திமுக அரசு ஒருபோதும் அடிபணி யாது என்றார். மேலும், ‘மோடிஜி, Where Is LPG?’ (சமையல் எரிவாயு சிலிண்டர் எங்கே?) என்று மக்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பிரதமரிடம் பதில் இல்லை என்று சாடிய அவர், சிலிண்டர் விலையை விண்ணைத் தொட வைத்துவிட்டு, இப்போது தேர்தல் நேரத்தில் மட்டும் விலைக் குறைப்பு நாடகம் ஆடுவதாகக் குற்றம் சாட்டினார். தர்மேந்திர பிரதானுக்குப் பதிலடியும் கல்வி உரிமைப் போரும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தின் கல்வித் திட்டங்கள் குறித்து விமர்சித்ததற்கு முதலமைச்சர் தகுந்த பதிலடி கொடுத்தார். “ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏதோ பெரிய கண்டுபிடிப்பைப் போலப் பேசு கிறார். தமிழகத்தின் கல்வித் தரம் மற்றும் பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகளை இந்தியா முழுமைக் கும் கொண்டு செல்வதுதான் தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கம் என்றால், முதலில் எங்களது ‘காலை உணவுத் திட்ட’ த்தையும், ‘புதுமைப் பெண்’ திட்டத்தையும் நாடு முழுவதும் அமல்படுத்தச் சொல்லுங்கள். அதை விடுத்து, மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் வகையில் இந்தித் திணிப்பையும், மும்மொழிக் கொள்கையையும் புகுத்த நினைத்தால் அந்த முயற்சி தமிழகத்தில் ஒருபோதும் பலிக்காது,” என்று எச்சரித்தார். பழனிசாமியின் துரோகப் பட்டியலும் ‘பியூஸ்’ போன சாமி கதையும் விருதுநகர் கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப் பாடி பழனிசாமியைச் சாடிய முத லமைச்சர், “துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனி சாமிதான்” என்று கடுமையாக விமர்சித்தார். “பழனிசாமியின் தேர்தல் தோல்விகளைக் கூட எண்ணிவிடலாம், ஆனால் அவர் செய்த துரோகங்களை எண்ணவே முடியாது. தன்னை வளர்த்துவிட்ட வர்களுக்கே துரோகம் செய்தவர், இப்போது தமிழ்நாட்டு மக்க ளுக்கும் துரோகம் செய்யத் துடிக் கிறார்,” என்றார். தி.மு.க.வின் ‘இல்லத்தரசி’ திட்ட அறிவிப்பால் எடப்பாடி பழனிசாமி நிலை குலைந்து போயிருப்பதாகக் குறிப் பிட்ட முதலமைச்சர், “நமது தேர்தல் அறிக்கையைப் பார்த்ததும் பழனிசாமி இப்போது ‘பியூஸ்’ போன சாமி ஆகிவிட்டார்,” என்று கிண்டல் செய்தார். ‘வாஷிங் மெஷின்’ அரசியலும் பா.ஜ.க.வின் ஊழல் முழக்கமும் பா.ஜ.க.வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்திய முதல மைச்சர், ஊழலைப் பற்றிப் பேச மோடிக்கும் அமித் ஷாவிற்கும் எந்தத் தகுதியும் இல்லை என்றார். “ஊழல் செய்தவர்களை எல்லாம் பா.ஜ.க. என்ற வாஷிங் மெஷினு க்குள் போட்டுத் தூய்மைப்படுத்தும் வித்தையை அவர்கள் செய்து வரு கிறார்கள். தேர்தல் பத்திரங்கள் மூலம் பல ஆயிரம் கோடிகளைத் திரட்டிவிட்டு, மற்றவர்களைப் பார்த்து ஊழல் என்று விரல் நீட்டு கிறார்கள். சி.ஏ.ஜி அறிக்கையில் வெளிவந்த 7 லட்சம் கோடி ரூபாய் முறைகேடுகளுக்குப் பிரதமர் என்ன பதில் சொல்லப் போகிறார்?” என்று கேள்வி எழுப்பினார். உரிமைகள் பறிப்பு : நிதியிலும் வஞ்சகம் ஒன்றிய அரசு தமிழகத்தை நிதி ரீதியாகப் புறக்கணிப்பதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நாம் கொடுக்கும் ஒரு ரூபாய் வரிக்கு ஒன்றிய அரசு வெறும் 29பைசாவை மட்டுமே திருப்பித் தருவதாக வேதனை தெரிவித்தார். “இயற்கைப் பேரிடர்கள் வந்த போது தமிழகத்திற்கு ஒரு பைசா கூட வழங்காத பிரதமர் மோடி, இப்போது வாக்குக் கேட்டு மட்டும் அடிக்கடி தமிழகத்திற்கு வருவது வேடிக்கை யாக இருக்கிறது. இது வெறும் தேர்தல் வருகை மட்டுமல்ல, தமிழகத் தின் வளங்களையும் உரிமைகளை யும் சுரண்டுவதற்கான வருகை,” என்று முதல்வர் ஆவேசமாக குறிப்பிட் டார். காமராசரை வீட்டோடு வைத்துக் கொளுத்த முயன்ற சங்கிக் கூட்டம்! விருதுநகரில் உரையாற்றிய முதலமைச்சர், பெருந்தலைவர் காம ராசரின் தியாகத்தைப் போற்றிப் பேசுகையில், பா.ஜ.க மற்றும் அதன் முன்னோடி அமைப்புகளின் உண்மை முகத்தைத் தோலுரித்தார். “என்.டி.ஏ–வைப் பொறுத்தவரைக் கும் தமிழ்நாட்டிற்கு எதிராக எல்லா வேலைகளையும் பார்த்துக்கொண்டு, தேர்தல் வந்தால் மட்டும் தமிழ் மேல் பாசம் இருப்பது மாதிரியும், காம ராசர், எம்.ஜி.ஆர். போன்ற தலை வர்களைச் சொந்தம் கொண்டாடவும் புறப்பட்டுவிடுகிறார்கள். இவர் களின் சங்கிக் கூட்டம் தான், 1966-ஆம் ஆண்டு காமராசரை தில்லியில் வீட்டோடு வைத்து கொளுத்தப் பார்த் தார்கள். இதைத்தான், ‘மனுதர்மத் திற்கும் காமராசரின் மனித தர்மத்திற் கும் நடக்கும் பலாத்கார போராட்டம்’ என்று தந்தை பெரியார் அன்று மிகக் கடுமையாகக் கண்டித்தார். இப்படி, காலம்தோறும் தமிழ் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்த் தலைவர்கள் மீதும், தமிழ்ப் பண் பாட்டின் மீதும் இவர்களுக்கு வெறுப்புதான் மிஞ்சியிருக்கிறது,” என்று முதலமைச்சர் குற்றம்சாட்டி னார். தொடர்ந்து பேசிய அவர், “இப்படிப்பட்ட தமிழின விரோதி களுடன் பழனிசாமி கூட்டணி வைத் திருக்கிறார். பா.ஜ.க.வின் ஒரே நோக்கம் தமிழ்நாட்டின் வளர்ச்சி யைத் தடுப்பதுதான்! என்.டி.ஏ. ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்தால் என்ன ஆகும் என்று நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டியது கூட இல்லை. இந்தியா முழுவதும் பா.ஜ.க. புகுந்த மாநிலங்கள் என்ன கதியில் இருக் கின்றன? பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்த தலைவர்களும், கட்சிகளும் என்ன ஆனார்கள் என்று பார்த்தாலே நமக்கு பதில் கிடைத்துவிடும்!” என்று எச்சரித்தார். மகத்தான வாக்குறுதிகள் தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை முதலமைச்சர் மக்க ளிடம் விவரித்தார். மகளிர் உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்வு, இல்லத்தரசிகளுக்கு 8,000 ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் கூப்பன், 35 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப், மற்றும் 8-ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் போன்ற திட்டங் கள் மூலம் ஒவ்வொரு வீடும் பயன டையும் என்றார். தொகுதிகளில் களம் காணும் வெற்றி வேட்பாளர்கள் தென்காசி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் போட்டியிடும் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு முதலமைச்சர் வேண்டு கோள் விடுத்தார். தென்காசி மாவட்டம்: வாசுதேவ நல்லூர் தொகுதியில் ஈ.ராஜா, தென்காசி தொகுதியில் கலை கதிர வன், ஆலங்குளம் தொகுதியில் மனோஜ் பாண்டியன், கடையநல்லூர் தொகுதியில் தி.மு.ராஜேந்திரன் (ம.தி.மு.க.) ஆகியோருக்கு உதய சூரியன் சின்னத்திலும், சங்கரன்கோ வில் தொகுதியில் காங்கிரஸ் வேட்பா ளர் கணேசனுக்குக் கை சின்னத்தி லும் வாக்களிக்க வலியுறுத்தினார். விருதுநகர் மாவட்டம்: அருப்புக் கோட்டைத் தொகுதியில் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், திருச்சுழித் தொகுதியில் தங்கம் தென்னரசு, சாத்தூர் தொகுதியில் கடற்கரை ராஜ், இராஜபாளையம் தொகுதியில் தங்கபாண்டியன் ஆகி யோருக்கு உதயசூரியன் சின்னத்தி லும், விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரனுக்கு (தே.மு.தி.க.) முரசு சின்னத்திலும், சிவகாசி தொகுதி யில் அசோகனுக்கு (காங்கிரஸ்) கை சின்னத்திலும், திருவில்லி புத்தூர் தொகுதியில் மகாலிங்கத்திற்கு (சிபிஐ) கதிர் அரிவாள் சின்னத்தி லும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.</p>
