தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பழனிசாமியின் கோட்டைத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!

11 Apr 2026, 5:30 am
பழனிசாமியின் கோட்டைத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!

பழனிசாமியின் கோட்டைத்திற்கு மக்கள் முற்றுப்புள்ளி வைப்பார்கள்!

மறைமலைநகர், ஏப்.10 - பாசத்துடன் சேர்ந்து எடப்பாடி பழனிசாமி போடும் ஆட்டத்திற்கு இந்தத் தேர்தல் முடிவுகட்டும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழங்கியுள்ளார். ஓராண்டு காலத்தை காஞ்சிபுரம் மாவட்டம் மறைமலைநகரில் வியாழனன்று இரவு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் பரப்புரை பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், எதிர்கட்சித் தலைவரின் வாய்க்கொழுப்புக்கு ஆவேசமாகப் பதிலடி கொடுத்தார்.

அண்ணா பிறந்த மண்ணில் வளர்ச்சி முழக்கம் “காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் எங்கு, எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள், எங்கு பார்த்தாலும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் தெரிகின்றன. இந்தத் தொழிற்சாலைகளை எல்லாம் கொண்டு வந்தது யார்? தி.மு.க. அரசு உருவாக்கிய இந்தத் ‘தொழிற்சாலைகளின் கோட்டைக்கு’ இன்று வாக்குக் கேட்டு வந்திருக்கிறேன். அடுத்த கட்ட வளர்ச்சிக்கு, திராவிட மாடல் 2.0-வுக்கு காஞ்சிபுரமும் செங்கல்பட்டும் தயாராகிவிட்டது” என்று அவர் குறிப்பிட்டார்.

பழனிசாமியின் வாய்க்கொழுப்பிற்குச் சாட்டையடி எடப்பாடி பழனிசாமியின் தரக்குறைவான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்த முதலமைச்சர், “ஸ்டாலின் முதல்வர் பதவியில் உட்கார்ந்திருப்பதே என் தயவால்தான் என்று பழனிசாமி உளறி வருகிறார். நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர். மக்கள் எனக்குப் போட்டு வாக்குகளை, நான் செய்த சாதனைகளுக்காகப் போடப்பட்டவை. ஆனால், பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பது ஊருக்கே தெரியும்.

சசிகலாவின் காலில் விழுந்து, தவழ்ந்து போய் முதல்வர் நாற்காலியைப் பிடித்தவர் அவர். கூவத்தூர் ஆட்டத்தையே பொறுக்காத தமிழ்நாடு, பா.ஜ.க.வோடு சேர்ந்து நீங்கள் போடும் ஆட்டத்தையா பொறுக்கும்? எடப்பாடி அவர்களே! உங்கள் கோட்டத்திற்கும், வாய்க்கொழுப்பிற்கும் இந்தத் தேர்தல் நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கும்” என்று ஆவேசமாகத் தெரிவித்தார்.

மேலும், “ஸ்டாலினுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது என்று சாபம் விடுகிறார் பழனிசாமி. நான் சொல்கிறேன், திமுக அரசின் திட்டங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் வரை, பயன் பெற்ற மக்களின் வாழ்த்துகள் இருக்கும் வரை, இந்த ஸ்டாலினைத் தமிழ்நாட்டை ஆள்வான். இதைத் தடுக்க யாராலும் முடியாது” என்று உறுதியைக் கூறினார்.

இரு மாவட்டங்களிலும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்யுமாறு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார். உதயசூரியன் சின்னத்தில்: ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் தா.மோ. அன்பரசன், மதுரவாயல் தொகுதியில் காரம்பாக்கம் கணபதி, காஞ்சிபுரம் தொகுதியில் நித்யா குமார், செங்கல்பட்டு தொகுதியில் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி, மதுராந்தகம் தொகுதியில் அமுது பொன்மலர், உத்திரமேரூர் தொகுதியில் க. சுந்தர் மற்றும் தாம்பரம் தொகுதியில் டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வலியுறுத்தினார்.

பிற சின்னங்களில்: திருப்பெரும்புதூர் தொகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கு. செல்வப்பெருந்தகைக்கு கை சின்னத்திலும், திருப்போரூர் மற்றும் செய்யூர் தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் பன்னீர்தாசன், சிந்தனைச்செல்வன் ஆகியோருக்கு பானை சின்னத்திலும்; பல்லாவரம் தொகுதியில் தே.மு.தி.க. வேட்பாளர் அனகை முருகேசனுக்கு முரசு சின்னத்திலும் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.