தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மக்கள் மறக்க மாட்டார்கள் பழனிசாமி அவர்களே! - அ.அன்வர் உசேன்

7 Apr 2026, 5:38 pm
மக்கள் மறக்க மாட்டார்கள் பழனிசாமி அவர்களே! - அ.அன்வர் உசேன்

மக்கள் மறக்க மாட்டார்கள் பழனிசாமி அவர்களே!

ஜோலார்பேட்டை தேர்தல் பிரச்சாரத்தில் பேசி யுள்ள எடப்பாடி பழனிசாமி, “அதிமுக வின் 10 ஆண்டு ஆட்சி எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் கூட மூக்கு மேல் விரல் வைக்கும் அளவுக்குச் சிறப்பாக நடந்தது” எனக் கூறியுள்ளார். 2011 முதல் 2021 வரை முதலில் ஜெயலலிதா தலைமையிலும் பின்னர் எடப்பாடி  தலைமையிலும் நடந்த ஆட்சியின் மோசமான நடைமுறை கள் குறித்து மக்கள் மறந்திருப்பார்கள் எனும் தைரியத்தில் எடப்பாடி பேசுகிறார் போலும்! அந்த 10 ஆண்டு ஆட்சியின் சில வேதனைகளை மக்கள் எப்பொழுதும் மறக்க மாட்டார்கள். பருப்பு முதல் செருப்பு வரை ஊழல்! H மதுரை வக்ஃபு வாரியக் கல்லூரியில் பேராசிரியர்கள் நியமனம் குறித்து இரு அதிமுக அமைச்சர்கள் தொடர்பாக மத்திய புலனாய்வு கழகம் விசாரணை. H சத்துணவுத் திட்டத்தில் ரூ. 2400 கோடி முறைகேடு.

H நெடுஞ்சாலை ரூ. 3100 கோடி ஊழல் - முதல்வர் தனது உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாகப் புகார். H பள்ளி மாணவர்களுக்குத் தரப்படும் மடிக்கணினி கொள்முதலில் சுமார் ரூ.235 கோடி கமிஷன்; சைக்கிள்கள் கொள்முதலில் ரூ. 106 கோடி கமிஷன்; செருப்பு கொள்முத லில் ரூ.14 கோடி கமிஷன். H குட்கா ஊழல் ரூ.200 கோடி. H ஸ்மார்ட் சிட்டி ஊழல். H பருப்பு கொள்முதல் ஊழல் ரூ. 400 கோடி. Hஅண்ணா பல்கலைக்கழக ஊழல் ரூ.200 கோடி. H போக்குவரத்து ஊழல் ரூ.300 கோடி. H சத்துணவு முட்டை கொள்முதல் ஊழல் ரூ.3000 கோடி. H மீனவர்கள் வாக்கி டாக்கி கொள்முதல் ஊழல் ரூ.80 கோடி. H எல்.இ.டி. பல்பு கொள்முதல் ஊழல் ரூ.139 கோடி. H நிலக்கரி கொள்முதல் ஊழல் ரூ.18,000 கோடி. H மின்சாரம் கொள்முதலில் ரூ.1,00,000 கோடி. H அறநிலையத்துறையில் இ-பூஜை ஊழல் ரூ.500 கோடி. H குந்தா புனல் மின் நிலைய ரூ.80 கோடி ஊழல். H பொங்கல் பரிசுப் பொருட்கள் கொள்முதலில் ரூ.50 கோடி ஊழல். H தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டத்தில் ரூ.100 கோடி ஊழல். H மணல் குவாரி ஊழல். Hபல்கலைக்கழகங்களில் துணைவேந் தர்கள் மற்றும் பேராசிரியர்கள் நியமன ஊழல் ரூ.250 கோடி.

H கோகோ கோலா நிறுவனத்திற்கு நில ஒதுக்கீடு ஊழல். H ஆவின் பால் கலப்பட ஊழல். H நீர்நிலை டெண்டர்கள் ஊழல். H காக்னிசண்ட் எனும் மென்பொருள் நிறுவனம் தனது கட்டிட அங்கீகாரத்திற்குத் தந்த கமிஷன் ரூ.13 கோடி. -என ஏராளமான ஊழல்கள் எடப்பாடி ஆட்சியில் மட்டும் இரண்டு வருடங்களில் நடந்துள்ளன. இந்த ஊழல் பட்டியலை வைத்துக்கொண்டுதான் மோடி அரசாங்கம் எடப்பாடியை மிரட்டி அதிமுகவை தன் பிடிக்குள் வைத்திருக்கிறது. தாங்கள் அடித்த கொள்ளை பணத்தைப் பாதுகாக்க அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மோடி அரசாங்கத்திடம் சரண் அடைந்துள் ளனர். இந்த விவரங்கள் அனைத்தும் அந்த காலகட்டத்தில் ஜூனியர் விகடன்/ எக்கனாமிக் டைம்ஸ்/ லைவ் மிண்ட்/ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பத்திரிகைகளில் வந்த செய்திகள் ஆகும். பா.ம.க. முன்வைத்த ஊழல் பட்டியல் 2017-ஆம் ஆண்டு இன்று அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமகவின் அன்புமணி அன்றைய ஆளுநரிடம் அதிமுக ஆட்சி மீது 200 பக்கம் கொண்ட ஊழல் பட்டியலைச் சமர்ப்பித் தார். அதன் முக்கிய அம்சங்கள்: H ரூ. 16,338 கோடி கிரானைட் ஊழல். H பல லட்சம் கோடி பெறுமான தாது மணல் கொள்ளை

. H ரூ.15,000 கோடி ஆற்று மணல் கொள்ளை. Hமின்சார கொள்முதல் ஊழல். H ரூ.730 கோடி பருப்பு கொள்முதல் ஊழல். H ரூ.12.31 கோடி முட்டை ஊழல். H ரூ.300 கோடி ஆவின் பால் ஊழல்.  Hகோகோ கோலா ஆலை அமைப்பதில் கமிஷன். -எனப் பல குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் அன்பு மணி பட்டியலிட்டிருந்தார். இன்று அதே அன்புமணி அதிமுக வுக்குக் கூட்டாளியாக உள்ளார். ஆனால் இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் மறையாமல் உள்ளன. இந்த ஊழல்கள்தான் பத்தாண்டு ஆட்சியின் சாதனைகளா எடப்பாடி அவர்களே! 2015 சென்னை பெருவெள்ளம்! 2015-ஆம் ஆண்டு சென்னை பெருவெள்ளம் அதிமுக ஆட்சியின் திறமையின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. 2018-ஆம் ஆண்டு தணிக்கை ஆணையம் தனது அறிக்கையில் இந்த வெள்ளம் இயற்கையின் சீற்றத்தைவிட மனிதரால் உருவாக்கப்பட்ட பேரழிவு என வர்ணித்தது. ஆக்கிரமிப்புகள் அகற்றாதது/ வடிகால் தேவையான அளவு இல்லாதது/ செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதில் ஏற்பட்ட தவறுகள்/ ஜெயலலிதா அரசாங்கத்தின் அதீத மையப் படுத்தப்பட்ட நிர்வாகக் கோளாறுகள் ஆகியவை இந்த பெருவெள்ளத்துக்குக் காரணமாக அமைந்தன.

குறிப்பாக ஒரு தனியார் மருத்துவமனையில் வெள்ளம் காரணமாக 18 நோயாளிகள் உயிரிழந்த சோகம் உலகம் முழுதும் விமர் சனத்தை உருவாக்கியது. இந்த பெருவெள்ளத்தில்: H 400-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு;  H1,16,000 வீடுகள் பாதிப்பு; H10 லட்சம் குழந்தைகள் உட்பட 30 லட்சம் மக்கள் பாதிப்பு;  Hஇன்றைய மதிப்பில் சுமார் ரூ. 27,000 கோடி இழப்பு. மேலும் கொடுமை என்னவெனில், பல தனியார் அமைப்புகள் தந்த நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படத்தை ஒட்டி அரசியல் செய்தனர் அதிமுகவினர்.

இதுதான் பத்தாண்டு ஆட்சியின் சாதனைகளா எடப்பாடி அவர்களே! சந்தி சிரித்த சட்டம் - ஒழுங்கு! அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு கடுமை யாக வீழ்ச்சி அடைந்தது. H ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப் பட்டனர். இந்தச் சம்பவத்தையே தொலைக்காட்சி பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்றார் முதல்வராக இருந்த இ.பி.எஸ். இத்தகைய கொடுமை கேள்விப்பட்டதுண்டா? H சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். H பொள்ளாச்சியில் பல பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். இதில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டது ஊரறிந்த ரகசியமாக ஆனது. H இந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் இதே போல் ஒரு சம்பவம் நாகர்கோவிலில் நடந்தது. H காவல்துறையில் உள்ள பெண் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லை எனும் கொடுமையான சம்பவம் நடந்ததும் தமிழ கத்தில்தான்! H தலித் மக்கள் மீது தாக்குதல் அதிகரித்தது. H ஏராளமான சாதி ஆணவக் கொலைகள் நடந்தன. இந்த அனைத்துச் சம்பவங்களிலும் இ.பி.எஸ் ஆட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.

நீண்ட போ ராட்டங்கள் அல்லது நீதிமன்றங்களின் தலையீட்டுக்குப் பின்னர்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது பத்தாண்டு ஆட்சியின் சாதனைகளா எடப்பாடி அவர்களே! குடியுரிமைச் சட்டத்தில் துரோகம் குடியுரிமைத் திருத்த மசோதாவுக்கு எதிராக முன்னணியில் நின்ற மாநிலங்களில் ஒன்று தமிழகம். தமிழகத்திலும் வேறு சில மாநிலங்களிலும் வாழும் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை அளிக்கவும் இந்தச் சட்டம் தவ றுகிறது. எனவே தமிழ்நாட்டு மக்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்தச் சட்ட வரைவை எதிர்த்துப் போராடினர். மக்களவையில் தனது மிருக பலம் மூலம் குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்றிய பா.ஜ.க.வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.

இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக 114 வாக்குகளும் எதிராக 105 வாக்குகளும் இருந்தன. அதிமுக வுக்கு 11 வாக்குகள் இருந்தன. அதிமுக எதிர்த்து வாக்களித்து இருந்தால் சட்டத்திற்கு ஆதரவாக 114 வாக்குகளும் எதிராக 116 வாக்குகளும் கிடைத்து இருக்கும். குடியுரிமைத் திருத்த வரைவுச் சட்டம் தோல்வி அடைந்திருக்கும். ஆனால் பாஜகவுக்கு ஆதரவாக எடப்பாடி கட்சியினர் வாக்களித்தனர். இதன் காரணமாக 125 வாக்குகள் மூலம் இந்தச் சட்டம் நிறை வேறியது. குடியுரிமைச் சட்டத்தை நிறைவேற்ற ஆதரவு அளித்தது பத்தாண்டு ஆட்சியின் சாதனைகளா எடப்பாடி அவர்களே!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.