மக்கள் மீண்டும் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்!
10 Apr 2026, 5:30 am

மக்கள் மீண்டும் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள்!

கோழிக்கோடு: கேரளாவில் பின் ராயியில் உள்ள ஆர்.சி.அமலா யு.பி. பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், "அனைத்துத் துறைகளிலும் சாதனைகளைப் படைத்து ஜனநாயக முன்னணி (எல்டிஎப்) அரசு செயல்பட்டுள்ளது" என்றார்.

நாட்டின் முன்னேற்றத்தில் ஐந்தாண்டு கால ஆட்சியில் எய்திய கேரள மக்களுக்குத் தெளிவான புரிதல் ஏற்பட்டுள்ளது. இது ஜனநாயக முன்னணியில் மட்டுமே வளர்ச்சியையும் நலத்திட்டங்களையும் ஒரே சீராக முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.

கேரளம் ஊழலற்ற மாநிலமாக மாறியிருப்பதற்கு காரணம் எல்டிஎப்-இன் அரசியல் கலாச்சாரமே ஆகும். மக்கள் எல்டிஎப் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். கடந்த தேர்தலை விட இந்த முறை மக்கள் மிகப்பெரிய ஆதரவை வழங்குவார்கள் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.