தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வளர்ச்சியை கண்கூடாக பார்க்கும் மக்கள்; திமுக அணிக்கே வெற்றியைத் தருவார்கள்!

2 Mar 2026, 3:30 pm
வளர்ச்சியை கண்கூடாக பார்க்கும் மக்கள்; திமுக அணிக்கே வெற்றியைத் தருவார்கள்!
<p><strong>வளர்ச்சியை கண்கூடாக பார்க்கும் மக்கள்; திமுக அணிக்கே வெற்றியைத் தருவார்கள்!</strong></p> <p>முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உறுதி சென்னை, மார்ச் 2 - தமிழகம் எல்லா துறைகளி லும், &lsquo;ஆல் ரவுண்டராக&rsquo; உயர்ந்துள் ளதை மக்கள் கண்கூடாக பார்ப்ப தாகவும், இதனால் திமுக தலைமை யிலான அணிக்கு அவர்கள் வெற்றி யை அளிப்பது உறுதி என்றும் முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித் தார். சென்னை நுங்கம்பாக்கத்தில் &ldquo;தி வீக்&rdquo; ஆங்கில வார இதழ் சார்பில் &nbsp;நடைபெற்ற &ldquo;தமிழ்நாடு தலைமைத் துவ உச்சிமாநாடு 2026&rdquo; நிகழ்ச்சி யில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். &nbsp; அப்போது, &ldquo;தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும், கடந்த 5 &nbsp;ஆண்டுகளில் தங்களின் பகுதியில், தங்களின் வீட்டில் எந்த அளவிற்கு முன்னேற்றம் வந்திருக்கிறது என்று கண்கூடாக பார்க்கிறார்கள்&rdquo; என்றும், &ldquo;அதனால், திமுக ஆட்சிக்கு ஆதரவான அலை வீசுகிறது!&rdquo; என்றும் தெரிவித்தார். பல்துறை சாதனைகள் ஒவ்வொரு துறையிலும் சாத னை படைத்துள்ளதாக விவரித்த முதல்வர், மருத்துவத் துறையில் &ldquo;மக்களைத் தேடி மருத்துவம்&rdquo;, &ldquo;நம்மைக் காக்கும் 48&rdquo;, &ldquo;நலம் காக்கும் ஸ்டாலின்&rdquo; மற்றும் இலவச கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டங்கள் ஐக்கிய நாடுகள் சபை யிடம் பாராட்டு பெற்றுள்ளன என்றார். &ldquo;கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் 75 லட்சம் வீட்டிணைப்புகள் வழங்கப்பட்டு 3 கோடி மக்கள் &nbsp;பயன்பெற்றுள்ளனர். பெருநகரங் களை இணைக்கும் நெடுஞ்சாலை கள், கிராமச் சாலை மேம்பாடு, பூங்காக்கள், பிரமாண்ட நூல கங்கள் ஆகியவை கட்டமைக்கப் பட்டு வருகின்றன. வரலாற்றில் இது வரை இல்லாத அளவில் வீட்டு மனை பட்டாக்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன&rdquo; என்று சாதனைகளைப் பட்டியலிட்டார். மகளிர் சிறப்புத் திட்டங்கள் இந்த ஆட்சியே மகளிர் மற்றும் மாணவர்களுக்கான ஆட்சி என்று கூறிய முதல்வர், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம், விடியல் பயணம், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன், நான் முதல்வன், கல்லூரி மாணவர்களுக்கு மடிக் கணினி, காலை உணவுத் திட்டம், தோழி விடுதிகள் உள்ளிட்ட திட்டங் கள் வெற்றிகரமாக செயல்படுத்தப் படுவதாக விவரித்தார். &nbsp;நாட்டிலேயே முதலிடம் பொருளாதார வளர்ச்சியில் முதல் இடம் பெற்ற மாநிலம் தமிழ்நாடு என்று ஒன்றிய பாஜக அரசே ஒப்புக் கொண்டுள்ளதையும், இந்த ஒட்டுமொத்த சாதனைகளும் ஒன்றிய அரசின் உதவியின்றி, அவர்களின் நெருக்கடிகளை மீறி சாதிக்கப்பட்டவை என்பதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார். பிரதமர் மோடி பொய் மதுரை பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, மதுரவாயல் - துறை முகம் மேம்பாலப் பணிகள் தாமதம் பற்றி குற்றம் சாட்டியிருப்பதைக் குறிப்பிட்டு, பாஜக கூட்டணி வைத்திருக்கும் அ.தி.மு.க.தான் இந்த திட்டம் வரக்கூடாது என்று தடை செய்தார்கள். வழக்கிலும் வாதாடினார்கள். பிரதமர் மோடிக்கு சொல்ல சாதனைகள் இல்லா ததால், தேர்தல் நேரத்தில் பொய்யை அவிழ்த்து விட்டி ருக்கிறார் என்று கூறிய முத லமைச்சர், ஒரே மேடையில் பழனி சாமி, &lsquo;அதிமுக ஆட்சி&rsquo; என்றும் பிர தமர் மோடி, &lsquo;தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி&rsquo; என்றும் முரண் பட்டு பேசியதை கேலி செய்தார். சட்டமன்றத் தேர்தலில் நிச்சயம் தமிழ்நாடு வெல்லும்! தேசிய ஜன நாயக கூட்டணி படுதோல்வி அடையும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.