சாலைக்கு இடம் விட்டு பணிகளை மேற்கொள்ள மக்கள் வலியுறுத்தல்
11 Dec 2025, 5:47 pm
<p><strong>சாலைக்கு இடம் விட்டு பணிகளை மேற்கொள்ள மக்கள் வலியுறுத்தல்</strong></p>
<p>தருமபுரி, டிச.11- சாலைக்கு இடம் விட்டு, கட்டுமானப் பணிகளை மேற் கொள்ள வேண்டும் என வலி யுறுத்தி ரயில் நிலைய மேம் பாட்டு பணிகளை தடுத்து பொதுமக்கள் போராட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி ரயில் நிலையத் தில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரு கின்றன. இதன்ஒருபகுதியாக ரூ.16 கோடி மதிப்பில் சரக்கு ஏற்றும் - இறக்கும் இடம், இதற்கான நடைபாதை, சரக்கு முனையத் தின் அலுவலகம், தொழிலாளர்களுக்கான ஓய்வறை மற்றும் சுகாதார வளாகம், சரக்கு ரயில் கண்காணிப்பு அறை உள்ளிட்ட கட்டு மானப் பணிகள் நடைபெறவுள்ளது. ஏற்க னவே இருக்கும் கட்டிடங்கள் அகற்றப்பட்டு புதிய பணிகள் நடைபெற்று வருகிறது. ரயில் நிலையத்தின் எதிரிலுள்ள நெல்லி நகர் பகு திக்கு அருகில் இதற்கான பணிகள் தொடங் கியது. அப்பகுதியில் ஜேசிபி இயந்திரம் மூலம் தொழிலாளர்கள் குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது நெல்லி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அப் பணிகளை உடனே நிறுத்தக்கோரி வியாழ னன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட னர். 5 மீட்டர் சாலைக்கு இடம் விட்டு கட்டு மானப் பணிகளை தொடங்க வேண்டும். இப் பகுதியில் கட்டிடங்கள் கட்டப்பட்டால் ஆயி ரக்கணக்கான பொதுமக்கள் சாலை வசதி யின்றி மிகவும் பாதிப்படைவார்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்போது அந்தப்பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.</p>
