தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வேலூரில் மத நல்லிணக்கம் வலியுறுத்தி மக்கள் ஒற்றுமை மேடை பொதுக்கூட்டம்

14 Nov 2025, 5:52 pm
வேலூரில் மத நல்லிணக்கம் வலியுறுத்தி  மக்கள் ஒற்றுமை மேடை பொதுக்கூட்டம்
<p><strong>வேலூரில் மத நல்லிணக்கம் வலியுறுத்தி &nbsp;மக்கள் ஒற்றுமை மேடை பொதுக்கூட்டம்</strong></p> <p>வேலூர், நவ.14- மத நல்லிணக்கம் மற்றும் மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் வேலூர் மாநகரம் ஆர்.என்.பாளையம் பஜார் வீதியில் வெள்ளியன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஒற்றுமை மேடையின் மாவட்ட அமைப்பாளர் சி.எஸ்.மகாலிங்கம் தலைமை தாங்கினார். சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் ஏ.கதிர் அகமது, சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.டி.சங்கரி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன், திமுக பகுதி செயலாளர் முனவர் பாஷா ஜே.நசீர், விசிக மாநகர மாவட்ட செயலாளர் வேலூர் பிலிப், துணை செயலாளர் இளங்கோ, பி.சேகர் (மதிமுக), திராவிட முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜி.எஸ்.இக்பால், வழக்கறிஞர் முக்தியாஸ், மனிதநேய ஜனநாயக கட்சி நகர செயலாளர் சலாமத் தாவூத் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர். சிபிஎம் மாநில குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன் பேசுகையில், ஒன்றிய பாஜக அரசு 2014-ல் பதவி ஏற்றதிலிருந்து இந்து-முஸ்லிம் வெறுப்புணர்வை ஏற்படுத்தி கலவரங்களை தூண்ட முயற்சித்து வருவதாகவும், மாட்டுக்கறி அரசியல், பிளவுவாத அரசியல், ராமர் கோவில் போன்றவை மூலம் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மக்களிடையே உள்ள ஒற்றுமையை அழிக்க முயல்வதாகவும் விமர்சித்தார். இஸ்லாமிய மக்கள் மீது குடியுரிமை சட்டத்தை திணித்ததாகவும், காஷ்மீரில் சிறப்பு அதிகாரம் வழங்கிய சட்டப்பிரிவு 370 மற்றும் 35(ஏ)-ஐ திரும்பப் பெற்றதாகவும், மீண்டும் எஸ்ஐஆர் என்கிற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் வழியாக குடியுரிமை சட்டத்தை கொல்லைப்புறமாக கொண்டு வர முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.