தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீதிக்கு வரும் மக்கள்... விடியலுக்கான இளைய நம்பிக்கையாய் மீனாட்சி!

21 Mar 2026, 2:42 pm
வீதிக்கு வரும் மக்கள்... விடியலுக்கான இளைய நம்பிக்கையாய் மீனாட்சி!
<p><strong>வீதிக்கு வரும் மக்கள்... விடியலுக்கான இளைய நம்பிக்கையாய் மீனாட்சி!</strong></p> <p>&ldquo;இது வெறும் தேர்தல் பிரச்சார மல்ல; அநீதிக்கு எதிரான போர்க்களத்தின் அறை கூவல்!&rdquo; - உத்தரபாரா தொகுதியின் வீதிக ளில் சிவப்புக்கொடி ஏந்தி வரும் மீனாட்சி முகர்ஜியை நோக்கி, வீடுகளை விட்டு மக்கள் ஓடிவந்து வரவேற்பது, வங்கத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்திற்கான தொ டக்கமாகப் பார்க்கப்படுகிறது. மக்கள் சொல்லும் துயரக் கதைகள் இப்பகுதியின் தாய்மார்களும், இளை ஞர்களும் மீனாட்சியிடம் கொட்டும் குமு றல்கள் ஆளும் திரிணாமுல் அரசின் அவ லங்களை அம்பலப்படுத்துகின்றன. &ldquo;சென்ற முறை வெற்றி பெற்ற திரிணாமுல் எம்.எல்.ஏ-வை நாங்கள் பார்த்ததே இல்லை&rdquo; என்கிறார் அப்பகுதிவாசி ஷியா மலி நஸ்கர். சாக்கடை நீர் தேங்குவது, டெங்கு - மலேரியா பாதிப்பு, மருத்துவ மனைகளில் அடிப்படை வசதிகள் இல்லா தது என மக்கள் படும் அவஸ்தைக்கு அளவே இல்லை. கல்விக்கூடங்களில் சீரழிவு மீனாட்சியைச் சந்திக்க வந்த 12-ஆம் வகுப்பு மாணவர் ராஜ்தீப் கோஷ், அரசுப் பள்ளிகளில் நிலவும் அவலங்களைப் பகிர்ந்து கொண்டார். &ldquo;பள்ளி நூலகங் கள் தூசு படிந்து கிடக்கின்றன. மதிய உண வில் சத்துக்கள் இல்லை. எஸ்.எப்.ஐ போரா டிய பிறகுதான், சட்டவிரோதமாக வசூ லிக்கப்பட்ட கல்விக் கட்டணம் குறைக்கப் பட்டது&rdquo; என்ற அவரது வார்த்தைகள் மாற்றத் தின் அவசியத்தை உணர்த்துகின்றன. சிதைக்கப்படும் பண்பாடு இடதுசாரி ஆட்சிக் காலத்தில் உருவான கலை மற்றும் கலாச்சார மேடைகளை திரிணாமுல் குண்டர்கள் அடித்து நொறுக்கி வருவதாகக் கலை ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக அமைப்புகள் மதத்தின் பெயரால் பிளவுகளை உண்டாக்கி, மக்க ளின் ஒற்றுமையைச் சிதைக்கத் துடிக்கின்றன. மீனாட்சியின் முழக்கம் மக்களின் அன்பையும், அவர்கள் தரும் இனிப்புகளையும் ஏற்றுக்கொண்டு வீதி வீதியாக நடக்கும் மீனாட்சி முகர்ஜி, &ldquo;சட்ட மன்றத்தில் மக்களின் குரல் ஒலிக்க இடது சாரிகள் அவசியம். அநீதிக்கு ஒரே மாற்று இடதுசாரி அரசியல் மட்டுமே!&rdquo; என முழங்குகிறார். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் ஊழல் மலிந்த திரிணாமுல் - பாஜக அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் மீனாட்சியை ஒரு &lsquo;போராட்டத்தின் முகமாக&rsquo; பார்க்கின்றனர். உத்தரபாராவின் ஒவ்வொரு வீதியும் இப்போது சிவப்பு நிறத் தில் விடியலை எதிர்நோக்கிக் காத்தி ருக்கிறது. உத்தரபாரா தொகுதி தேர்தல் களத்திலிருந்து&hellip;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.