தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மதுரை மாநகரில் மோசமான சாலைகளால் மக்கள் அவதி

29 Jan 2026, 3:04 pm
மதுரை மாநகரில் மோசமான சாலைகளால் மக்கள் அவதி
<p><strong>மதுரை மாநகரில் மோசமான சாலைகளால் மக்கள் அவதி</strong></p> <p>மதுரை, ஜன.29- மதுரை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளின் மோசமான நிலை காரணமாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதனால் மாநகராட்சி நிர்வாகம் மீது பொது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. 100 வார்டுகளை உள்ளடக்கிய மதுரை மாநகராட்சியின் கட்டுப் பாட் டில் சுமார் 1,200 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகள் உள்ளன. &nbsp;இந்நிலையில், குடிநீர் குழாய் &nbsp;உடைப்பு, பாதாளச் சாக்கடை பணிகள் உள்ளிட்ட காரணங்களுக் காக தோண்டப்படும் சாலைகள் &nbsp;முறையாக சீரமைக்கப்படாத தால், பல இடங்களில் பெரிய பள் &nbsp;ளங்கள் உருவாகி போக்குவரத் திற்கு கடும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசரடி எஸ்.எஸ். காலனி வடக்கு வாசல் அருகே கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக சாலையில் தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருகிறது. இதனால் தற்போது அப்பகுதியில் &nbsp;போக்குவரத்து நெரிசலை ஏற் படுத்தும் அளவிற்கு பெரிய பள்ளம் &nbsp;உருவாகியுள்ளது. இதுகுறித்து அப்பகுதியில் கடை நடத்துப வர்கள் கூறுகையில், முன்பு குழாய் &nbsp;பழுது சரிசெய்யப்பட்டபோதும் சாலை முழுமையாக சீரமைக்கப் படாமல் கற்கள் மட்டும் கொட்டப் பட்டதால் மீண்டும் சாலை சேதம டைந்ததாக தெரிவித்தனர். அதேபோல், எல்லீஸ் நகர் சிங்காரவேலர் தெருவில் கடந்த பல மாதங்களாக சாலை மேடு&ndash; பள்ளமாக இருந்து வருகிறது. மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி குளம்போல் காணப்படுவ தால் இரவு நேரங்களில் வாகன &nbsp;ஓட்டிகள் விபத்தில் சிக்குவதாக வும், இதுகுறித்து மாநகராட்சி அதி காரிகளுக்கு பலமுறை தகவல் &nbsp;அளித்தும் இதுவரை எந்த நடவடிக் &nbsp;கையும் எடுக்கப்படவில்லை என் &nbsp;றும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கோச்சடை மேலக்கால் மெயின் &nbsp;ரோடு, டோக் நகர் மற்றும் கோச் சடை மெயின் ரோடு, தண்ணீர் தொட்டி வரை உள்ள சாலையும் &nbsp;மிகவும் மோசமான நிலையில் உள் &nbsp;ளது. இப்பகுதியில் குடிநீர் குழாய் &nbsp;உடைப்புகள் அடிக்கடி ஏற்பட்டு, &nbsp;குடிநீர் வீணாக வெளியேறுவதுடன் வாகன ஓட்டிகள் கீழே விழும் சம்பவங்களும் தொடர்கின்றன. குழாய் சீரமைப்புக்காக தோண்டப்படும் பள்ளங்கள் முறை யாக மூடப்படாததால், காலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மாநகராட்சி நிர்வாகம் உடனடி யாக சாலைகள் மற்றும் குடிநீர்&ndash;பாதாள சாக்கடை பணிகளை தர மான முறையில் சீரமைக்க வேண் &nbsp;டும் என்றும், &ldquo;சாலை பழுது &nbsp;பார்த்த பின் மீண்டும் தோண்டும் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்&rdquo; என்றும் பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.