முந்தய பக்கம்

வாய்க்கால் அடைத்து சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி

10 Apr 2026, 5:30 am
வாய்க்கால் அடைத்து சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி

வாய்க்கால் அடைத்து சாலையில் ஓடும் கழிவுநீரால் மக்கள் அவதி

இராமநாதபுரம், ஏப்.9- இராமநாதபுரம் சஞ்சீவி மலை கிழக்கு பகுதியில் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சாலை வழியாக ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த சாலையில் இருபுறமும் வாய்க்கால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.

இதுகுறித்து பலமுறை தெற்கு வெங்காலத்தூர் ஊராட்சி மன்றத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கை இல்லை. இந்நிலையில் பாலாஜி தியேட்டர் அருகே உள்ள வாய்க்காலில் திடீரென்று அடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் சாலை நடுவே ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து இந்த வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டு பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram