தருமபுரியில் மயானப்பாதை ஆக்கிரமிப்பால் சடலத்தை கொண்டு செல்ல மக்கள் படும் துயரம்
22 Feb 2026, 3:26 pm
<p><strong>தருமபுரியில் மயானப்பாதை ஆக்கிரமிப்பால் சடலத்தை கொண்டு செல்ல மக்கள் படும் துயரம்</strong></p>
<p>தருமபுரி, பிப்.22- நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகளை கடந்து, ‘டிஜிட்டல் இந்தியா’ பற்றி பேசிக்கொண்டிருக் கும் வேளையில், தருமபுரி மாவட் டத்தில் ஒரு கிராம மக்கள் தங்க ளின் அடிப்படை உரிமையான ‘கண் ணியமான இறுதி ஊர்வலத்திற் காக’ இன்றும் போராடிக்கொண்டி ருப்பது சமூக அவலத்தின் உச்ச மாக உள்ளது. தருமபுரி மாவட்டம், அரூர் வட் டத்திற்குட்பட்ட நரிப்பள்ளி கிராமத் தில் 500க்கும் மேற்பட்ட பட்டிய லின குடும்பங்கள் வசித்து வரு கின்றனர். இவர்கள் தலைமுறை தலைமுறையாக பயன்படுத்தி வரும் மயானத்திற்கு செல்லும் பாதையை, அருகிலுள்ள விவசாய நில உரிமையாளர்கள் ஆக்கிரமித் துள்ளதாக கூறப்படுகிறது. இத னால், அகலமாக இருக்க வேண் டிய மயானப் பாதை, இன்று ஒரு நபர் மட்டுமே நடந்து செல்லக் கூடிய குறுகிய ‘ஒத்தையடிப் பாதை யாக’ உருமாறி நிற்கிறது. இந்நிலையில், நரிப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் என்பவரின் மனைவி சின்னம்மாள் (80) வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது உடலை அடக்கம் செய்ய மயானத்திற்கு எடுத்துச் சென்ற போது, அப்பகுதி மக்கள் சந்தித்த துயரம் சொல்லொண்ணாதது. குறு கிய பாதையின் காரணமாக வாக னங்களை உள்ளே கொண்டு செல்ல முடியவில்லை. கரடுமுர டான அந்த ஒத்தையடிப் பாதை யில், சடலத்தை சுமந்து செல்ல மக்கள் படும் அவதி, காண்போரை கண்கலங்கச் செய்தது. ஒரு மனித னின் வாழ்வு முடிந்த பிறகும், அவ னது இறுதிப் பயணம் இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் தான் அமைய வேண்டுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பு குறித்து அப் பகுதி மக்கள் பலமுறை வட்டாட் சியர் அலுவலகத்திலும், மாவட்ட நிர்வாகத்திடமும் மனு அளித்துள்ள னர். ஆனால், இதுவரை எந்தவொரு ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை என் பது வேதனைக்குரியது. மயானப் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பு களை உடனடியாக அகற்றி, சாலை வசதி ஏற்படுத்த வேண்டும். மயா னத்திற்கு சுற்றுச்சுவர், முறை யான தெருவிளக்கு மற்றும் தண் ணீர் வசதி செய்து தரப்பட வேண் டும். அரசியல் சாசனம் வழங்கிய சமத்துவமும், உரிமையும் காகித அளவில் மட்டுமே இல்லாமல், நரிப் பள்ளி போன்ற கிராமப்புற மக்க ளுக்கும் சென்றடைய வேண்டும். மாவட்ட நிர்வாகம் இனியும் காலம் தாழ்த்தாமல், உடனடியாக தலை யிட்டு இந்த மயானப் பாதை சிக்க லுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண் டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
