தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்கள் கூடுதல் நகர பேருந்துகளை இயக்க கோரிக்கை

20 Feb 2026, 2:39 pm
போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்கள் கூடுதல் நகர பேருந்துகளை இயக்க கோரிக்கை
<p><strong>போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் மக்கள் கூடுதல் நகர பேருந்துகளை இயக்க கோரிக்கை</strong></p> <p>- லெனின் - தருமபுரி, பிப். 20- தருமபுரி நகரில் நிலவும் கடுமை யான போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், புதிய புறநகர் பேருந்து நிலையத்திற்கு பயணி கள் எளிதில் சென்று வரவும் போதிய &nbsp;இணைப்புச் சாலைகளை உரு வாக்கி, கூடுதல் நகரப்பேருந்து களை இயக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி நகரின் நெரிசலைக் &nbsp;குறைக்க, சோகத்தூர் ஊராட்சிக் குட்பட்ட ஏ.ரெட்டிஅள்ளியில் நவீன &nbsp;வசதிகளுடன் புதிய புறநகர் &nbsp;பேருந்து நிலையம் அமைக்கப் பட்டு, கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி &nbsp;முதல் பயன்பாட்டிற்கு வந்தது. சேலம் மற்றும் பென்னாகரம் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகில் அமைந்துள்ள இந்த பேருந்து நிலையத்திற்கு அனைத்து புற நகர் பேருந்துகளும் மாற்றப்பட்டுள் ளன. இருப்பினும், பேருந்து நிலை யத்தை மாற்றிய வேகத்தில், அதற் கான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளையும், இணைப்புச் சாலைகளையும் மேம்படுத்த மாவட்ட நிர்வாகம் தவறிவிட்ட தாக பொதுமக்கள் குற்றம் சாட்டு கின்றனர். புதிய பேருந்து நிலையம் &nbsp;நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தொலை வில் உள்ளதால், வெளியூர்களில் இருந்து நள்ளிரவு மற்றும் அதி காலை நேரங்களில் வரும் பயணி கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்ற னர். போதிய நகர பேருந்து வசதி இல்லாததால், ஆட்டோக்களில் &nbsp;தருமபுரி நகருக்கு வர ரூ. 250 வரை &nbsp;செலவழிக்க வேண்டியுள்ளது. வசதியற்ற ஏழை எளிய மக்கள் வேறு வழியின்றி பொதி சுமை களுடன் பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்லும் அவலநிலை நீடிக் கிறது. புதிய பேருந்து நிலையத் திற்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் நேதாஜி சாலை மற் றும் நான்கு முனைச் சந்திப்பு வழி யாகவே இயக்கப்படுகின்றன. ஏற்க னவே குமாரசாமிப்பேட்டை வழி யாக உள்ள குறுகலான சாலைக ளில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சென்று வரும் நிலையில், தற்போது பேருந்துகளும் அங்கே குவிவதால் முன்னெப்போதும் இல்லாத வகை யில் போக்குவரத்து முடக்கம் ஏற் படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் அலுவலகம் செல்வோர் குறித்த நேரத்திற்கு செல்ல முடி யாமல் தவிக்கின்றனர். எனவே, போக்குவரத்து சிக்க லுக்கு தீர்வு காண மாவட்ட &nbsp;நிர்வாகம், நான்கு முனை சந்திப் பிலிருந்து குமாரசாமிப்பேட்டை வழியாக சோகத்தூர் சந்திப்பு சாலை வரை சாலையை உடனடி யாக விரிவாக்கம் செய்ய வேண் டும். ஆட்சியர் அலுவலகம் அருகே &nbsp;உள்ள ரயில்வே தரைப்பாலப் பகு தியை &nbsp;மேம்படுத்தி, தடங்கம் மேம் பாலம் வரை புதிய இணைப்புச் &nbsp;சாலை அமைக்க வேண்டும். ராமக் காள் ஏரி மதிகோன்பாளையம் பிரிவு &nbsp;சாலையிலிருந்து கிருஷ்ணகிரி - &nbsp;சேலம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் புதிய சாலை அமைக்கப்பட வேண்டும். மேலும், புதிய பேருந்து நிலை யத்திலிருந்து நகரின் அனைத்துப் பகுதிகளுக்கும் 24 மணி நேரமும் தடையின்றி நகர பேருந்துகளை இயக்க வேண்டும். தருமபுரி நக ரின் எதிர்கால வளர்ச்சியைக் கருத் தில் கொண்டு, மாவட்ட நிர்வாகமும் &nbsp;போக்குவரத்துத் துறையும் ஒருங் கிணைந்து இந்த போர்க்கால நட வடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தருமபுரி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.