மூக்கனூரிலிருந்து 200 மீட்டர் தள்ளி ரயில் நிலையம் அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்
31 Dec 2025, 3:37 pm
<p><strong>மூக்கனூரிலிருந்து 200 மீட்டர் தள்ளி ரயில் நிலையம் அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>தருமபுரி, டிச.31- மூக்கனூரிலிருந்து 200 மீட்டர் தள்ளி ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் புதனன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி - மொரப்பூர் ரயில் பாதை திட்டம் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மீண்டும் தருமபுரி - மொரப்பூர் ரயில் திட்டப்பணிகள் தொடங் கப்பட்டது. இந்நிலையில், தருமபுரியை அடுத்த மூக்கனூர் கிராமத்தில் ரயில் நிலையம் அமைத்தால், சுமார் 250 வீடுகள் அகற்றப்பட்டு, வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 200 மீட்டர் தள்ளி ரயில் நிலையம் அமைத்தால் பெரிய பாதிப்பிலிருந்து எங்கள் வீடுகள் தப்பி விடும். எனவே, ரயில் நிலையத்தை சற்று தள்ளி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இவர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2024 ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகம், ரயில்வே நிர்வாகம் இணைந்து பொது மக்களுக்கு பாதிப்பில்லாத வண்ணம் ரயில் நிலையத்தை சற்று தள்ளி அமைக்க ஒப்புதல் தெரிவித்தது. ஆனால், ஒரு சில அரசியல் கட்சியினர், ரியல் எஸ்டேட் இடைத்தரகர்கள் சுய லாபத்திற்காக, சிலரை தூண்டி விட்டு பழைய இடத்தி லேயே ரயில் நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வரு கின்றனர். எனவே, ஒப்பந்தப்படி 200 மீட்டர் தள்ளி ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி யைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவர் தலைமையில் 250க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு புதனன்று கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம், சாலை மறியலில் ஈடுபடவுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.</p>
