சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த விஏஒ சிபிஎம் தலைமையில் மக்கள் போராட்டம்
5 Dec 2025, 4:21 pm
<p><strong>சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த விஏஒ சிபிஎம் தலைமையில் மக்கள் போராட்டம்</strong></p>
<p>தருமபுரி, டிச.5- சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த கிராம நிர்வாக அலுவலரைக் கண்டித்து, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தருமபுரி ஒன்றியத்திற் குட்பட்ட மனலூர் கிராமத் தில் கிறிஸ்துவ குடும்பத்தி னர் வசித்து வருகின்றர். இங்குள்ளவர்கள் இறந்தால் இக்கிராமத்தின் அருகே உள்ள சிக்கம்பட்டி நெடுஞ்சாலையோரமாக உள்ள இடத்தில் அடக்கம் செய்து வந்தனர். தற் போது பொம்மிடி - தொப்பூர் சாலை விரிவாக் கத்தின் போது, மனலூர் கிறிஸ்துவ மக்களின் மயானமும் சாலை விரிவாக்கத்திற்கு எடுத் துக்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு அடக் கம் செய்யக்கூடாது என கிராம நிர்வாக அலு வலர் தெரிவித்தார். இந்நிலையில், மனலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி (45) உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த நிலை யில், அவரை மயானத்தில் அடக்கம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் அனுமதிக்க வில்லை. இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டத் தலைவர் எம்.முத்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் வட்டச் செயலாளர் தி.வ. தனுசன், ஒன்றியக்குழு உறுப்பினர் அந்தோ னிராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க வட்டச் செயலாளர் எம்.கணேசன், கிளை செயலா ளர்கள் மாதையன், நடராஜன், தனம், விவே கானந்தன் ஆகியோர் கிராம மக்களிடம் விவரத்தை நேரில் கேட்டறிந்தனர். இதைத் தொடர்ந்து, ஆரோக்கியசாமி உடலை வைத்து வெள்ளியன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி வட்டாட்சியர் செளகத்அலி, கிராம வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவ லர் ஆகியோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தற்போது இறந் துள்ள ஆரோக்கியசாமியின் உடலை பழைய இடத்திலேயே அடக்கம் செய்ய வும், நான்கு நாட்களுக்குள் புதியதாக அதே பகுதியில் மயானத்திற்கு இடம் ஒதுக்குவ தாக உறுதியளிக்கப்பட்டது. அதனடிப்ப டையில் போராட்டத்தை கைவிட்டு, இறுதி சடங்கிற்கான வேலையை துவங்கினர்.</p>
