தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

5 Dec 2025, 4:21 pm
கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

பள்ளியின் மேற்கூரையை சரி செய்யக்கோரி உப்பிலிபாளையம் பகுதி மக்கள் மறியல்

அவிநாசி, டிச.5- அவிநாசி அருகே உப்பிலிபாளையத்தில் ஊராட்சி ஒன்றி யத் துவக்கப்பள்ளியின் பழுதடைந்த கட்டிடத்தை சீரமைக் கக் கோரி வியாழனன்று   அப்பகுதி மக்கள்  சாலை மறியல்  போராட்டத்தில்  ஈடுபட்டனர். அவிநாசி ஒன்றியம் உப்பிலிபாளையத்தில் பழமை வாய்ந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகி றது. இப்பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியர், ஒரு  ஆசிரியர் உள்ள நிலையில், 25க்கும் மேற்பட்ட மாணவர்கள்  படித்து வருகின்றனர். இந்த பள்ளியின் மேற்கூரை பழுத டைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் மாண வர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. இதை உட னடியாக சீரமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரி வருகின்றனர். எனினும் இதன் மீது எவ்வித  நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், உடனடியாக துவக்கப்பள்ளியை சீர மைக்கக் கோரி உப்பிலிபாளையம் பிரதான சாலையில்  மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த  சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஆறு முகம் மற்றும் காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உரிய நடவ டிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் கலைந்து சென்றனர்.

பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற கோரிக்கை

உடுமலை, டிச.5- உடுமலை நகரில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல் படும் டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண் டும் என பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உடுமலை நகராட்சி பகுதியில் வணிக நிறு வனங்கள், திருமண மண்டபம் மற்றும் கூட்டு றவு வங்கி இருக்கும் பசுபதி வீதி போக்குவ ரத்து அதிகம் இருக்கும் தளி பாதையை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது.  இந்த வீதியில் இருக்கும் டாஸ்மாக் கடைக்கு  வரும் நபர்களின் அருவருக்கத்தக்க செயல் பொதுமக்களை முகம் சுழிக்க வைப் பதாக இருப்பதால், வணிக வளாகத்திற்கு மக் கள் வருகை இல்லாமல், வீதி முழுவதும் குடி மக்களின் திறந்தவெளி மதுபானக் கூடமாக மாறியுள்ளது.  இதே போல் உடுமலை ரஜேந்திரா சாலை யில் இருக்கும் டாஸ்மாக் கடை இருக்கும் பகு தியில் அரசு நடுநிலைப் பள்ளிகள், அரசு சார் பில் நடக்கும் போட்டி தேர்வு எழுதும் மாண வர்களுக்கு இலவச வகுப்புகள், சுகாதார அலுவலகம், மருத்துவமனைகள், கிராம மக் கள் முதல் விவசாயிகள் விளைபொருட் களை விற்பனை செய்யும் மார்க்கெட் மற்றும்  ரயில் நிலையம் என நகரின் முக்கிய வீதிகளில்  இருக்கும் டாஸ்மாக் கடையால் போக்குவ ரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் அங்கிருக் கும் அண்ணா பூங்காவும், குடிமகன்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதால் பூங்காவிற்கு வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இப்படி பொது மக்களுக்கு விரோதமாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடி யாக அகற்ற வேண்டும் என்று பொது மக்கள்  மற்றும் வணிகர்கள் கோரிக்கை வைத்துள்ள னர். உடுமலை நகரில் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடை களை அகற்ற வேண்டும் என உடுமலை நகர்மன்றத்தின் முதல் கூட்டத்திலேயே தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. நான்கு ஆண்டு களுக்கு மேல் ஆகிவிட்டது. இருப்பினும் இன்று வரை நடவடிக்கை இல்லை. அனைத்து தரப்பினருக்கும் இடையூறாக இருக்கும் டாஸ்மாக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இன்று குறைதீர் கூட்டம்

உடுமலை, டிச.5 - வனத்துறை சார்பில் விவசாயிகளின் குறைகளை கேட்கும் கூட்டம் 6 ஆம் தேதி சனிக்கிழமை உடும லைப்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்து வனத்து றையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, உடுமலைப்பேட்டை மற்றும் அமராவதி வனச்சர கத்திற்குட்பட்ட வன எல்  லையை ஒட்டியுள்ள பகு திகளில் வன உயிரினங்க ளால் விளைநிலங்களில் ஏற்படும் சேதாரம், குறித்து கலந்தாலோசிக்க உடு மலைப்பேட்டை வனச்சரக  அலுவலகத்தில் நடைபெ றுகிறது என தெரிவிக்கப்பட் டுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.