தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தில் தமிழக மக்கள்!

12 Mar 2026, 4:20 pm
தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தில் தமிழக மக்கள்!
<p><strong>தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தில் தமிழக மக்கள்!</strong></p> <p>சென்னை, மார்ச் 12 - இஸ்ரேல் &ndash; ஈரான் போர் பதற்றம் காரணமாக &nbsp;சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை &nbsp;உயர்ந்து, அதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. எண்ணெய் போக்குவரத்துக்கு முக்கியமான ஹோர்முஸ் நீரிணை வழித்தடம் தடைப்பட்டதால் உலகளவில் எரிசக்தி விநியோகத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு இந்நிலையில் தமிழ்நாட்டில் கடந்த சில &nbsp;நாட்களாக வணிக மற்றும் வீட்டு பயன்பாட்டிற்கான எல்பிஜி சிலிண்டர்களின் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாமதம் மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. சிலிண்டர் கிடைக்குமோ என்ற அச்சத்தில் சென்னை மாநகரம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் காலி சிலிண்டர்களு டன் எரிவாயு ஏஜென்ஸிகளுக்கு முன்பதிவு செய்ய நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பெட்ரோல் பங்குகளில் பரபரப்பு பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற வதந்தியால் சென்னையில் ஏராளமான பெட்ரோல் நிலையங்களில் கடந்த இரண்டு நாட்களாக வாகன ஓட்டிகள் கூட்டமாக வந்து எரிபொருள் நிரப்பி வருகின்றனர். இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுவதுடன் நிலைமையை சமாளிக்க முடியாமல் பெட்ரோல் பங்குகளும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பெட்ரோல் டீசல் கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் நிலவும் நிலைமை குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஆலோசனை நடத்தினார். முதல்வர் வேண்டுகோள் முதல்வர் மு.க. ஸ்டாலின், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என தெரிவித்துள்ளார். மேற்கு ஆசியப் போர்ச்சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை எதிர்கொள்ள இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகம் தொடர்பாக பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து அமைச்சர் சக்கரபாணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாகவும் கூறினார். போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் பதற்றம் கொள்ள வேண்டாம் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.