முந்தய பக்கம்

அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் குளிக்காடு மக்கள்!

10 Dec 2025, 4:08 pm
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் குளிக்காடு மக்கள்!
<p><strong>அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும் குளிக்காடு மக்கள்!</strong></p> <p>தருமபுரி, டிச.10- குளிக்காடு கிராமத்தில் குடிசையில் வாழும் மக்கள், மின்சாரம், சாலை, குடி நீர் என எந்தவித அடிப்படை வசதிகளு மின்றி மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வரு கின்றனர். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், குளிக்காடு கிராமத்திலுள்ள மலைப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். நிலமற்ற கூலி தொழிலாளர்களான இப் பகுதி மக்கள், தங்குவதற்கு வீடின்றி &nbsp;தென்னை ஓலை மற்றும் தார்பாய் மூலம் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்ற னர். இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வழங்காததால் இருளிலேயே வாழ்ந்து வருகின்றனர். இதனால் இரவு நேரங்க ளில் விஷ ஜந்துக்கள் மூலம் உயிருக்கு &nbsp;ஆபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும், அவசர உதவிக்கு மருத்துவமனைக்கு செல்வதற்குகூட முறையான சாலை வசதி இல்லை. 20க்கும் மேற்பட்ட சிறு வர்களுக்கு ஆதார் அட்டை இல்லை என &nbsp;காரணம் கூறி, இதுவரை பள்ளியில் சேர்க்கபடாமல் உள்ளனர். மேலும், &nbsp;இப்பகுதி மக்களுக்கு இதுநாள் வரை &nbsp;ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்பட வில்லை. இப்பகுதியில் உள்ள மேல் நிலை நீர்த்தேக்க தொட்டியின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் குழாயானது, சாக்கடை கால்வாய்க்குள் அமைக்கப் பட்டுள்ளதால், தண்ணீர் குழாய் பழுத டைந்து தண்ணீருடன் சாக்கடை நீர் &nbsp;கலந்து செல்கிறது. இதனை அருந்தும் மக்களுக்கு தோல் நோய், விஷ காய்ச் சல் என பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு வருகிறது. சாலை, குடிநீர், வீடு, மின்சாரம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளையும் இதுவரை யாரும் செய்து தரவில்லை. அரசின் எந்த திட்ட மும் எங்களுக்கு கிடைப்பதில்லை என &nbsp;அப்பகுதி மக்கள் ஆதங்கப்படுகின்ற னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram