தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜபர்வான் மலையில் சிஆர்பிஎப் தளம் அமைக்க திட்டம் ஜம்மு-காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு

11 Nov 2025, 3:41 pm
ஜபர்வான் மலையில் சிஆர்பிஎப் தளம் அமைக்க திட்டம் ஜம்மு-காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு
<p><strong>ஜபர்வான் மலையில் சிஆர்பிஎப் தளம் அமைக்க திட்டம் ஜம்மு-காஷ்மீர் மக்கள் கடும் எதிர்ப்பு</strong></p> <p>ஸ்ரீநகர் ஜம்மு-காஷ்மீரின் கோடைகால தலைநக ரான ஸ்ரீநகரின் அருகே &nbsp;உள்ளது ஜபர்வான் மலை. இது &nbsp;அரை வட்ட வடிவ மலைத் தொடர் ஆகும். பீர் பஞ்சால் மற் &nbsp;றும் இமயமலைகளுக்கு இடை யில் அமைந்துள்ளது. மலை யேறுபவர்களுக்கு மிகவும் பிரபலமான இடமாகும். இந்த மலைத்தொடரில் ஆசியாவின் மிகப்பெரிய துலிப் (பூ) தோட்ட மும் உள்ளது. &nbsp;இந்நிலையில், தால் ஏரியை ஒட்டியுள்ள இந்த இயற்கை எழில் கொஞ்சும் ஜபர்வான் மலையில் மத்திய ரிசர்வ் துணை ராணுவப் படைகளின் (சிஆர்பிஎப்) 61, 79, 117 மற்றும் 132 பட்டாலியன்களுக்கான பாதுகாப்புப்படை தளத்தை அமைக்க ஒன்றிய ராணுவ அமைச்சகம் திட்டமிட்டு, அப் &nbsp;பகுதி மக்களுக்கு ராணுவத் &nbsp;தரப்பில் இருந்து 40க்கும் மேற் &nbsp;பட்டோருக்கு இடமாற்ற நோட் டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் ஜபர்வான் மலை மீது சிஆர்பிஎப் தளம் அமைக்க ஸ்ரீநகர் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக உள்ளூர் &nbsp;வாசிகள் கூறுகையில், &ldquo;ஜபர் வான் மலைகள் ஒரு பெரிய பசுமை மண்டலம் ஆகும். தால் &nbsp;ஏரியை ஒட்டியுள்ள இந்த பகுதியில் சிஆர்பிஎப் தளம் &nbsp;அமைக்கப்பட்டால் 50,000க்கும் &nbsp;மேற்பட்ட மரங்கள் வெட்டப் படும். துலிப் தோட்டமும் நாச மாகும். இதனால் சுற்றுச்சூழல் மற்றும் நெகிழ்வான தன்மை யை மேற்கு இமயமலை சாரல் &nbsp;இழக்கும். இமய மலைகளை சேதப்படுத்தும் பணி காஷ்மீ ருக்கு நல்லதல்ல. மேலும் உள் ளூர் மக்கள் இடம்பெயர்வு சூழலை சந்திக்க நேரிடும் என்ப தால், ஜபர்வான் மலையில் சிஆர்பிஎப் தளம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்&rdquo; என ஸ்ரீநகர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். &nbsp;ஜம்மு-காஷ்மீரில் &ldquo;இந் தியா&rdquo; கூட்டணி ஆட்சி நடை பெற்று வரும் நிலையில், ஆளும் &nbsp;தேசிய மாநாட்டு கட்சி &nbsp;அரசாங்க மும் ஜபர்வான் மலையில் சிஆர்பிஎப் தளம் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்திடம் கோரி க்கை விடுத்துள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.