கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
20 Nov 2025, 3:46 pm

திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணியை கைவிட பூதனஅள்ளி மக்கள் வலியுறுத்தல்

தருமபுரி, நவ.20- பூதனஅள்ளியில் மேற்கொள்ளப்படவுள்ள திடக் கழிவு மேலாண்மை திட்டப்பணியை கைவிட வேண்டு மென கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தி யுள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், பூதன அள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் நிலம் கையகப்படுத்தி, தரும புரி நகராட்சி குப்பைக்கழிவுகளை சேமித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணியை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இத்திட்டத்தை இப் பகுதியில் செயல்படுத்தினால் நிலத்தடி நீர் மாசடை யும். விவசாய நிலங்கள் மலட்டுத்தன்மை ஏற்படுவது டன், ஊராட்சி மக்களுக்கு சுவாச கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக வுள்ளது. இதனால் பூதனஅள்ளி ஊராட்சியில் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை தவிர்த்து, வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்ய வேண்டுமென அப் பகுதி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்தையும், தமி ழக அரசையும் வலியுறுத்தியுள்ளனர்.

சேவல் சண்டை சூதாட்டம்: 5 பேர் கைது

நாமக்கல், நவ.20- சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் கைது செய்த நிலையில், 12 பேர் தலைமறை வாகினர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்துள்ள சின்ன ஆனங்கூர் பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வெப்படை போலீசா ருக்கு புதனன்று மாலை தகவல் கிடைத்தது. இதனை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது போலீசாரை கண்டதும் சேவல் சண்டை சூதாட் டத்தில் ஈடுபட்டு கொண்டு இருந்தவர்கள் தப்பி ஓடி னர். இதில், 12 பேர் தலைமறைவான நிலையில், ஈரோடு, பள்ளிபாளையம் பகுதிகளைச் சேர்ந்த தினேஷ், ஜெய் கணேஷ், ரகுமான், சந்தோஷ், பூபதி ராஜா ஆகிய 5 பேரை வெப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் சம்பவ இடத்திலிருந்து இருசக்கர வாகனங்கள் 5, மூன்று சொகுசு கார்களை பறிமுதல் செய்து தொடர்ந்து வெப்படை போலீசார் தலைமறைவான நபர்களை தேடி வருகின்றனர்.

3 ஆவது முறையாக போலி மருத்துவர் கைது

கோவை, நவ.20- சூலூர் தாலுகா, ஜே.கிருஷ்ணாபுரம் பகுதியில் “நேஹா கிளினிக்” எனப் பெயரிட்டு போலி மருத்துவ மனை நடத்தி வந்த முத்துலட்சுமி (42) மூன்றாவது முறை யாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்கு நருக்கு தகவல் கிடைத்ததையடுத்து. அதன்படி சூலூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கஜேந்தி ரன் மேற்பார்வையில் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு, கண்காணிப்பாளர் குமரவேல், அலுவலக உதவியாளர் மணிகண்டன், செவிலியர் மதி ராமலட்சுமி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொண்ட குழு புத னன்று மாலை ஜே.கிருஷ்ணாபுரம் பகுதிக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது “டாக்டர்” எனக் கூறிக்கொண்டு கிளினிக்கை நடத்தி வந்த முத்துலட்சுமி யிடம் மருத்துவப் படிப்பு சான்றிதழ் எதுவும் இல்லை என்பது உறுதியானது. மருத்துவம் தொடர்பான எந்தத் தகுதியும் இல்லாமல் பொதுமக்களுக்கு ஊசி போடு வது, மாத்திரை கொடுப்பது உள்ளிட்டு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. கிளினிக்கில் இருந்த மருந்துகள், ஊசிகள் உள்ளிட்ட அனைத்துப் பொருட் களையும் ஆய்வுக்குழு பறிமுதல் செய்தது. போலி டாக்டரை உடனடியாக சுல்தான்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்த ஆய்வுக்குழு, புகார ளித்தது. புகாரின் பேரில் சுல்தான்பேட்டை போலீசார் முத்துலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத் தில் நேர்நிறுத்தி, சிறையில் அடைத்தனர். ஏற்கெனவே நெகமம் காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதிகளில் இதேபோன்று போலி மருத்துவ மனை நடத்தியதாக முத்துலட்சுமி மீது இரண்டு வழக்கு கள் நிலுவையில் உள்ளன. இதன்மூலம் இது அவரது மூன்றாவது கைது என்பது தெரியவந்துள்ளது. போலி மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், மருத்துவர்களும் வலியுறுத்தி னர்.

தார்ச்சாலையின் மேலே மீண்டும் சாலை அமைக்க மக்கள் எதிர்ப்பு

நாமக்கல், நவ.20- தார்ச்சாலையின் மேலே மீண்டும் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சிக் குட்பட்ட 24 ஆவது வார்டு பகுதியான சுந்தரம் நகர் பகுதியில் வியாழனன்று காலை தார் சாலை அமைப்ப தற்காக நகராட்சி அதிகாரிகள் வாகனங்களைக் கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்ட அப்பகுதி மக்கள் தார் சாலை நன்றாக தான் உள்ளது. எதற்காக தார் சாலை அமைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய துடன், ஏற்கனவே தார் சாலை அமைக்கும் பொழுது சாலையை தோண்டாமல் மேலோட்டமாக சாலைகளை போட்டு செல்வதால் சாலையின் உயரம் அதிகரித்து வரு கிறது. இதனால் குடியிருப்புப் பகுதிகள் பள்ளமாக மாறிவிட்டன. சாலைகளில் செல்லும் மழைநீர் வீடுக ளுக்கு புகுந்து பாதிக்கப்படுகின்றன. எனவே, சாலை அமைக்கும் பணி செய்ய வேண்டு மானால் பழைய சாலைகளை தோண்டி தரமான சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து சாலை அமைக்கும் பணியை தடுத்தனர். இது குறித்து தகவல் அறிந்த குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் சம்பவ இடத்திற்கு வந்து போராட் டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி தற்காலிக மாக நிறுத்தி வைப்பதாக கூறி வாகனங்களை திரும்ப எடுத்துச் சென்றனர்.