தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊழல் மீது மக்கள் போர் தொடுக்க வேண்டும்!

15 Jul 2026, 10:52 pm
ஊழல் மீது மக்கள் போர் தொடுக்க வேண்டும்!

ஊழல் மீது மக்கள் போர் தொடுக்க வேண்டும்!

லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ.ராமராஜ் பேச்சு

உதகை, ஜூலை 15- ‘மக்களின் நல்வாழ்வுக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் எதிரியான ஊழல் மீது மக்கள் போர் தொடுக்க வேண்டும்’ என லோக் ஆயுக்தா உறுப்பினர் வீ.ராமராஜ் அழைப்பு விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில் ‘தூய நிர்வா கத்திற்கு லோக் ஆயுக்தா சட்டம் அறிவோம்’ என்ற தலைப்பில் கருத் தரங்கம் புதனன்று நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பிராங்கி ளின் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட லோக் ஆயுக்தா உறுப் பினர் டாக்டர் வீ.ராமராஜ் பேசுகை யில், மக்களிடமிருந்து பல்வேறு வகைகளில் வரிகளையும் கட்ட ணங்களையும் அரசு வசூலிக்கிறது. அரசுக்கு கிடைக்கும் வருமானத் தின் மூலம் மக்கள் நலத்திட்டங்க ளும், சேவைகளும் அரசால் வழங் கப்படுகிறது. இவற்றில் நடைபெ றும் ஊழல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. மக்களின் நல்வாழ் வுக்கும் நாட்டின் வளர்ச்சிக்கும் ஊழலும் லஞ்சமும் எதிரிகளாக வளர்ந்து நிற்கின்றன. லஞ்சத் துக்கும் ஊழலுக்கும் எதிரான போர் நாடு முழுவதும் தொடங்கப்பட வேண்டும். மேலும், லஞ்சம் கேட்பவர் களை இந்த சமுதாயத்திற்கு காட்டிக் கொடுங்கள். லஞ்சம் கேட் டால் நாடு முழுவதும் பிரபலப் படுத்தப்பட்டு, குடும்பத்திலும் உற வினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தி யிலும் சமுதாயத்திலும் அவமானப் படுத்தப்பட்டு விடுவோம் என்ற பயம் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் லஞ்சத்துக்கு எதிரான இயக்கம் தொடங்கப்பட வேண்டும். இந்த இயக்கங்கள் மூல மாக லஞ்சமும் ஊழலும் மக்க ளுக்கு தெரியப்படுத்தப்பட வேண் டும். தமிழகத்தில் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை தெரிவிக்க மாநில அரசின் லஞ்ச ஒழிப்பு காவல் துறை ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்படுகிறது. இந்த புகார்களை தமிழ்நாட்டிலுள்ள லோக் ஆயுக்தா அமைப்பிலும் சமர்ப்பிக்கலாம். மாநில அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பொது ஊழியர்கள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் முதல் அனைத்து அரசு ஊழியர்கள் மீதான லஞ்ச புகார்களை விசாரிக் கும் அதிகாரம் கொண்டதாக தமிழ் நாடு லோக் ஆயுக்தா அமைக்கப் பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்பு ணர்வு மக்களிடையே போதுமான தாக இல்லை. தமிழ்நாடு லோக் ஆயுக்தா விசாரணை மன்றம் குறித்த விழிப்புணர்வை தமிழகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டிய தருணம் இதுவாகும், என்றார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.