நாட்டு மக்கள் நம்பிட வேண்டும்
8 Apr 2026, 5:30 am

நாட்டு மக்கள் நம்பிட வேண்டும்

தேர்தல் ஆணையத்தின் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது; தேர்தல்கள் நியாயமாகவும் சுதந்திரமாகவும் எவ்வித அச்சமுமின்றி இடமின்றி நடைபெறும் என்று ஞாயிறன்று கோல் கத்தாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார்.

உண்மைதான். ஆணையம் அவரது நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. அரசியல் சட்டரீதியாக நாடாளுமன்றம் ஒப்புதல் பெற்றுச் செய்த வேண்டிய காரியங்களை எல்லாம், வரம்பைத் தாண்டி தேர்தல் ஆணையம், சிறப்புத்தீவிரத் திருத்தம் என்று குடியரசுத்தலைவர் தீர்மானிக்கும் நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியிருப்பதிலிருந்தே தெரிந்து கொள்ளத்தானே செய்கிறார்கள்.

2024 நாடாளுமன்றத் தேர்தலின் போது மாதிரி நடத்த விதிமுறை மீறி சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்புப் பேச்சுப் பேசியவர் வந்த போதெல்லாம் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானது.