தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வறட்சியால் விவசாயம் பாதிப்பு பயிர் காப்பீடு, இழப்பீட்டுத் தொகைகளை வழங்கக் கோரி மக்கள் சந்திப்பு இயக்கம்

20 Dec 2025, 2:23 pm
வறட்சியால் விவசாயம் பாதிப்பு பயிர் காப்பீடு, இழப்பீட்டுத் தொகைகளை  வழங்கக் கோரி மக்கள் சந்திப்பு இயக்கம்
<p><strong>வறட்சியால் விவசாயம் பாதிப்பு பயிர் காப்பீடு, இழப்பீட்டுத் தொகைகளை &nbsp;வழங்கக் கோரி மக்கள் சந்திப்பு இயக்கம்</strong></p> <p>சிவகங்கை, டிச.20- சிவகங்கை மாவட்டம் &nbsp;மானாமதுரை காளையார் கோவில் தாலுகாவிற்கு உட் &nbsp;பட்ட கீழ மாயாளி கிராமத்தில் &nbsp;சாவியாகி போன விவசாயத் &nbsp;திற்கு இழப்பீடு தொகை யும், பயிர் காப்பீட்டு தொகை யும் வழங்கக் கோரி மக்கள் &nbsp;சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. வீரபாண்டி, ஒன்றியச் செய லாளர் முனியராஜ், ஒன்றியக் &nbsp;குழு உறுப்பினர்கள் பர மாத்மா, முருகானந்தம், வேல்முருகன், சிஐடியு தலை வர் வீரையா, சிபிஎம் மானா மதுரை ஒன்றியக் குழு உறுப்பினர் தேவதாஸ் ஆகி யோர் இந்த இயக்கத்தில் பங்கேற்றனர். இந்த இயக்கத்தில் பங் &nbsp;கேற்ற கே.வீரபாண்டி கூறு கையில், &ldquo;சிவகங்கை மாவ ட்டம் காளையார்கோவில் தாலுகா கீழ மாயாளி. மேல மாயாளி. என்.பெருங்கரை, கே.பெருங்கரை, வேளாணி, தேவனேந்தல், எஸ்.காரக் &nbsp;குடி, நல்லாண்டிபுரம், தெற்கு &nbsp;சந்தனூர், புக்குலி, வடக்கு &nbsp;சந்தனூர், அரியனூர், வேதி யரேந்தல், பணிக்கனேந்தல், பள்ளமிட்டான் உள்பட பல &nbsp;கிராமங்களில் மழையின்றி &nbsp;விவசாயம் பொய்த்துவிட் டது. இதனால் விவசாயி கள் கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளனர்&rdquo; என்றார். &nbsp;கீழ மாயாளி கிராமத்தின் விவசாயிகள் பாண்டி, கருப் &nbsp;பையா ஆகிய இருவரும் கூறுகையில், &ldquo;கீழ மாயாளி கிராமத்தில் பல லட்சம் ரூபாய் செலவு செய்து கண்மாய் மேம்பாடு செய்யப்பட்டது. ஆனால் முழுமையாக பணி &nbsp;நடைபெறவில்லை. மூன்று &nbsp;மடைகள் புதுப்பிக்கப்பட் டுள்ளன. அதில் ஒரு மடை யில் தண்ணீர் நிற்காமல் சென்று கொண்டிருக்கிறது. விவசாயமும் சாவியாகி அறுக்கிற நிலைமைக்கு மாறிவிட்டது. இது தொடர் பாக மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு பொய்த்துப் போன விவசாயி களுக்கு நிவாரணமும், பயிர் &nbsp;காப்பீட்டு தொகையும் வழ ங்க வேண்டும்&rdquo; என்றனர்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.