முந்தய பக்கம்

வீடுகளில் தேங்கிய மழைநீரால் அரசம்பட்டு மக்கள் அவதி!

3 Dec 2025, 2:59 pm
வீடுகளில் தேங்கிய மழைநீரால் அரசம்பட்டு மக்கள் அவதி!
<p><strong>வீடுகளில் தேங்கிய மழைநீரால் அரசம்பட்டு மக்கள் அவதி!</strong></p> <p>கள்ளக்குறிச்சி, டிச.3 - கள்ளக்குறிச்சி மாவட்ட த்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் சங்கராபுரம் வட்டம் அரசம்பட்டு கிராமத்தில் தற்போது பெய்த மழையில் மழை நீர் வெளியேறுவதற்கு வழின்றி கிராம தெருக்களில் தேங்கி நிற்பதால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்ப ட்டுள்ள நிலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் வருமோ என்ற அச்சத்தில் பொது மக்கள் உள்ளனர். பஞ்சாயத்து நிர்வாகம் உடனே தலையிட்டு வீடு மற்றும் தெருக்களில் உள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றி தர வேண்டும். அதேபோல் இப்பகுதியில் மழைக்காலங்களில் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்வதற்கு வடிகால் வாய்க்கால்கள் அமைத்து தர வேண்டும் என்பது பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram