தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாட்டுச்சந்தையில் குவிந்த மக்கள்

5 Feb 2026, 3:40 pm
மாட்டுச்சந்தையில் குவிந்த மக்கள்
<p><strong>மாட்டுச்சந்தையில் குவிந்த மக்கள்</strong></p> <p>நாமக்கல், பிப்.5- காளிப்பட்டி கந்தசாமி கோயில் தைப்பூச தேர் திரு விழாவை ஒட்டி, மாட்டுச்சந்தை மற்றும் கடை வீதிகளில் பொது மக்கள் குவிந்தனர். நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை அடுத்த காளிப் பட்டியில் உள்ள கந்தசாமி கோவிலில் தைப்பூசத் தேரோட் டத்தை ஒட்டி நாட்டுமாட்டு சந்தை கூடுவது வழக்கம். பல &nbsp;இடங்களில் மாட்டு சந்தைகள் கூடினாலும் காளிப்பட்டியில் மட்டும் தான் நாட்டு மாட்டுக்கு என தனி சந்தை கூடுகிறது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும். சேலம் ஆத்தூர், தருமபுரி, கிருஷ்ண கிரி உள்ளிட்ட தமிழக்த்தின் பல மாவட்டங்களில் இருந்தும், &nbsp;விற்பனைக்கு வரும் மாடுகளை தமிழகத்தின் பல்வேறு பகுதி களில் இருந்து மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்க ளில் இருந்தும் இங்கு மாடுகளை வாங்க வருவார்கள். இந்த &nbsp;சந்தையில் சந்தனப் பிள்ளை, மயிலை, நாட்டுக்குட்டை, தெக்கத்தி மாடு கோரப்பட்டு செவலை, கறுக்கா மயிலை, &nbsp;காங்கேயம் மயிலக் காளை வகை, கராம் பசு வகை, ஆலம் பாடி, வடக்கத்தி மற்றும் நாட்டுமாடுகள் என ஆயிரக்கணக் கான மாடுகள், சுழியில்ராஜா சுழி என்ற வகை கொண்ட ஜல்லி கட்டில் கலந்து கொண்ட காங்கேயம் காளைகள், எடப்பாடி &nbsp;பகுதியை சேர்ந்த காராம் பசு வகை சந்தைக்கு வந்திருந் தது. இதுகுறித்து மாட்டு வியாபாரிகள் கூறியதாவது, பவானி &nbsp;மயிலம்பாடிபகுதியில் இருந்து காங்ககேயம் காளைகள் மற்றும் பசுக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு காளை களுக்கு ஜோடி ரூ.2 லட்சமும், பசு மற்றும் கன்றுக்கு ஒரு &nbsp;லட்சம் ரூபாய் விலை வைக்கப்பட்டது. இதேபோல் நாட்டுக்குட்டை மாடும் பார்வையாளர்களை கவர்ந்தது. மாட்டின் பல் மற்றும் சுழி தரம் ஆகியவைகளை வைத்து விலை கிடைப்பதாகவும் நாட்டுமாட்டுக்கு என கூடும் &nbsp;இந்த சந்தை தமிழக அளவில் புகழ்பெற்றது. தேருக்கு அடுத்த &nbsp;நாள் தொடங்கி சத்தாபரம் முடிந்து இரண்டு நாட்கள் என &nbsp;நான்கு நாட்கள் தொடர்ந்து சந்தை நடக்கும். இந்த ஆண்டு &nbsp;சுமார் மூன்று கோடி வரை வியாபாரம் நடக்கும் என எதிர் பார்த்ததாக தெரிவித்தனர். ஜல்லிக்கட்டு காளைகள் வண்டி மாட்டு காளைகள், கோவி லுக்கு வரும் பக்தர்கள் வீட்டுக்கு வளர்க்க வாங்கிச் செல்லும் &nbsp;நாட்டு பசு மாடுகள், சிந்து பசுக்கள் விற்பனை மிக ஜோராக &nbsp;நடந்து வருகிறது. மாட்டுச்சந்தையை ஒட்டி தலைகயிறு முகக்கயிறு, சாட்டை, &nbsp;சலங்கைகள், கழுத்து மணிகள் விற்கும் கடைகளும் இங்கு &nbsp;இருந்தது. தொடர்ந்து ஒரு வார காலத்திற்கு காளிப்பட்டி கந்த சாமி கோவில் ஒட்டி முறுக்கு அதிரசம் சீடை மற்றும் பல்வேறு &nbsp;வகையான நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப் பட்டுள்ளது. தினந்தோறும் மாலை நேரங்களில் கணிச மான அளவில் பொதுமக்கள் கடைவீதிகளில் வருகை தந்து &nbsp;வண்ணம் உள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.