தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பயன்பாடில்லாத காரணம்பேட்டை பேருந்து நிலையம் ஜவுளி சந்தை அமைக்க மக்கள் கோரிக்கை

19 Feb 2026, 3:09 pm
பயன்பாடில்லாத காரணம்பேட்டை பேருந்து நிலையம் ஜவுளி சந்தை அமைக்க மக்கள் கோரிக்கை
<p><strong>பயன்பாடில்லாத காரணம்பேட்டை பேருந்து நிலையம் ஜவுளி சந்தை அமைக்க மக்கள் கோரிக்கை</strong></p> <p>திருப்பூர், பிப்.19 &ndash; திருச்சி &ndash; கோவை நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் காரணம்பேட்டை பேருந்து &nbsp;நிலையம் கட்டப்பட்ட 2015ஆம் ஆண்டு முதல் &nbsp;11 ஆண்டு காலமாக பயன்பாடு இல்லாமல் இருக்கிறது. இப்பேருந்து நிலையத்தை புதுப்பித்து, &nbsp;ஆய்வு செய்து பொருத்தமான முறையில் &nbsp;பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டு மென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர். திருப்பூர் மாவட்டம் கோடங்கிபாளையம் &nbsp;ஊராட்சிக்குட்பட்டது காரணம்பேட்டை. இது கோவை திருச்சி நெடுஞ்சாலையை ஒட்டி &nbsp;உள்ளது. ஏராளமான கல் குவாரிகள், விசைத் தறி ஜவுளிக் கூடங்கள் அமைந்திருக்கும் இப்பகுதி சூலூருக்கும், பல்லடத்திற்கும் இடையில் அமைந்திருக்கும் முக்கியமான ஊராகும். அத்துடன் பொள்ளாச்சி சாலை &nbsp;காமநாயக்கன்பாளையத்தில் இருந்து சோம னூர் வழியாக அன்னூர், மேட்டுப்பாளையம், உதகைக்குச் செல்லும் சாலையின் சந்திப்பு &nbsp;மையமாகவும் காரணம்பேட்டை உள்ளது. கோவை &ndash; பல்லடம், காமநாயக்கன் பாளையம் &ndash; கருமத்தம்பட்டி ஆகிய சாலைக ளின் சந்திப்பு மையத்தில் உள்ள போக்கு வரத்து சிக்னல் பகுதியில் அடிக்கடி வாகனப் &nbsp;போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகி றது. இந்த இடத்திலேயே பேருந்துகள் நிறுத் தப்பட்டு பயணிகளை ஏற்றி இறக்கி வருகின்ற னர். எனினும் கடந்த 2015ஆம் ஆண்டு அப்போ தைய அதிமுக ஆட்சிக் காலத்தில் இங்கு &nbsp;தனியாக பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ரூ.1.78 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட பேருந்து நிலையம் ஆரம்பம் முதலே பயன் பாடில்லாமல் வீணாக உள்ளது. ஊரின் மையப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிக முள்ள பகுதியில் அமைக்கப்படாமல் பல்ல டம் சாலையில் சுமார் 1 கி.மீட்டர் தொலைவில் &nbsp;ஊருக்கு ஒதுக்குப்புறமாக இப்பேருந்து நிலையம் கட்டப்பட்டதுதான் தோல்விக்கு காரணம் என்று இப்பகுதி மக்கள் கூறு கின்றனர். &nbsp; &nbsp;இந்த பேருந்து நிலையம் திறப்பு விழா கண்டு ஒரிரு நாட்கள் மட்டுமே இயங்கியது. அதன் பின்னர் படிப்படியாக பேருந்து நிலை யம் பயனற்று, அரசு நிதி வீணாகி வருகிறது. &nbsp;வணிக பயன்பாட்டுக்காக கட்டப்பட்ட கடை கள், இரண்டு சக்கர வாகன நிறுத்துமிடம், கழிப்பிடம், உள்ளிட்டவையும் பயன்பா டின்றி உள்ளன. பேருந்து நிலையத்திற்குள் அமைக்கப் பட்டுள்ள, குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம். இருக்கைகள் துருப்பிடித்துள்ளது. சமூக விரோத செயல்களும் நடந்து வருகின்றன. இப்பேருந்து நிலையத்தை மாற்றுப் பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு நிர்வா கம் உரிய முயற்சி மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதி மக்கள் கூறினர். குறிப்பாக, கால்நடைகள் சந்தை அல்லது மொத்த காய்கறி சந்தை அமைக்கலாம். இந்த வட்டா ரம் முழுவதும் விசைத்தறி ஜவுளி மைய மாக திகழ்வதால் பல்லடத்தில் விசைத்தறி ஜவுளிச் சந்தை அமைக்க வேண்டும் என்ற &nbsp;கோரிக்கையும் நெடுங்காலமாக எழுப்பப் பட்டு வருகிறது. எனவே இங்கு ஜவுளிச்சந்தை அமைத் தால் வெற்றிகரமாக பயன்படுத்தலாம் என்றும் மக்கள் கூறுகின்றனர். எனவே தமிழக &nbsp;அரசு இதை பரிசீலித்து உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோடங்கி பாளையம் ஊராட்சி பகுதி மக்கள் எதிர்பார்க் கின்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.