தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்த கிராம சபை கூட்டங்களில் மக்கள் கோரிக்கை

27 Jan 2026, 3:28 pm
100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்த  கிராம சபை கூட்டங்களில் மக்கள் கோரிக்கை
<p><strong>100 நாள் வேலை திட்டத்தை முறைப்படுத்த &nbsp;கிராம சபை கூட்டங்களில் மக்கள் கோரிக்கை</strong></p> <p>அவிநாசி, ஜன.27- மகாத்மா காந்தி தேசிய &nbsp;ஊரக வேலை உறுதிச் &nbsp;சட்டத்தை முறைப்படுத்தக் கோரி திங்களன்று அவிநாசி &nbsp;சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்ற கிராம சபை &nbsp;கூட்டங்களில் அகில இந்திய &nbsp;விவசாயத் தொழிலாளர் சங் கத்தினர் மனு அளித்தனர். &nbsp;ஒன்றிய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை ரத்து செய்து, &nbsp;விபிஜிராம்ஜி சட்டம் சமீபத்தில் கொண்டு வந் துள்ளது. இதை திரும்ப பெற வேண்டும். &nbsp;முன்பு இருந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த &nbsp;வேண்டும், கூலியை ரூ.700 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை கிராம சபையில் தீர்மானம் &nbsp;நிறைவேற்ற வேண்டும் என அகில இந்திய &nbsp;விவசாய தொழிலாளர் சங்கம் அவிநாசி ஒன் றிய குழு சார்பில் வேலாயுதம்பாளையம், கருவலூர், கானூர், நடுவச்சேரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மனு அளிக் கப்பட்டது. வேலாயுதம்பாளையம் ஊராட்சி யில் அமைப்பின் மாவட்டத் தலைவர் ஏ. சண்முகம் கோரிக்கை மனு அளித்தார். ஆட்சியரிடம் சிபிஎம் மனு நடுவச்சேரி கிராம சபை கூட்டத்தில், நடு வச்சேரி ஊராட்சியில் பழுதான தெரு விளக்கு களை சீரமைக்க வேண்டும். 3 ஆவது வார்டு &nbsp;பெருமாள் கோயில் பகுதியில் சாலை அமைக்க வேண்டும். கே.சி.வரதராஜ நகர், பூமாதேவி நகர், ஏவி எஸ் மகாலட்சுமி நகர், &nbsp;வைஷ்ணவி கார்டன் உள்ளிட்ட இடங்களில் அடிப்படை பிரச்சனைகளை சீரமைத்துக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரேவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் ராஜேஷ் தலைமையில் கட்சியி னர் மற்றும் ஊர் பொதுமக்கள் அளித்தனர்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.