வயதாகும் போது குட்டையாகும் மனிதர்கள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்
13 Dec 2025, 1:22 pm
<p><strong>வயதாகும் போது குட்டையாகும் மனிதர்கள்</strong></p>
<p>வயதாகும்போது நாம் குள்ளமாகிறோம். நம் உயரத்தில் ஒரு சிறிது குறைவது தவிர்க்கமுடியாதது. ஆனால் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நாம் முதுமையடையும்போது நமது எலும்பு மற்றும் தசைகளின் நிறையில் ஏற்படும் இந்த மாற்றத்தை தாமதப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒரு செண்டி மீட்டர் “சந்தேகமில்லாமல் வயதாகும்போது நாம் குட்டையாகிறோம்” என்று லங்காஸ்ட்டர் (Lancaster) மருத்துவப் பள்ளி உடல் உள்ளு றுப்பியல் பேராசிரியர் ஆடம் டைலர் (Adam Taylor) கூறுகிறார். நாற்பது வயதிற்குப் பிறகு ஒவ்வொரு பத்தாண்டிற்கும் உயரத்தில் ஒரு செண்டி மீட்டர் அளவு நாம் குட்டையாகிறோம். ஒவ்வொரு ஆண்டும் ஆண்கள் 0.08 முதல் 0.1% வரையும் பெண்கள் 0.12 முதல்0.14% வரையும் தங்கள் உடல் எடை உயரத்தை இழக்கின்றனர். இதில் சில பாதிப்புகள் வயதாகும்போது நாம் அதிகமாக சரிந்த நிலையில் இருப்பதால் ஏற்படு கிறது. நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நின்று கொண்டு வேலை பார்ப்பவர்களின் முது குத்தண்டு வளைந்துபோகிறது. அவர்களின் முதுகுத்தண்டு அந்த நிலையை இயற்கையானது என்று கருதுகிறது. சில சமயங்களில் வயதான வர்கள் குனிந்த நிலையில் அதிக பாதுகாப்பு உள்ள ஈர்ப்பு விசை மையத்தைப் பெற முயல் கின்றனர். ஈர்ப்பு விசை முதுகெலும்பு இடை வட்டத் தட்டு அல்லது முதுகுத்தண்டில் உள்ள டிஸ்க்கில் இருந்து நீரை அழுத்தி வெளியேற்றுவதால் தின மும் நாளின் ஆரம்பம் முதல் முடிவு வரை உள்ள நேரத்தில் நம் உயரம் குறைகிறது. உடல் உயரத்தில் ஏற்படும் மாற்றம் தானிய மனிகள் போன்ற சிறிய அளவுகளிலும் நிகழ்கிறது. உடலின் எலும்பு மற்றும் தசைகளின் நிறை குறைவதால் முப்பதிற்கும் முப்பத்தி ஐந்து வயதிற்கும் இடையில் உயரம் குறைகிறது. முதுகுத்தண்டை பாதுகாக்கும் முள் எலும்பு களுக்கு இடையில் முதுகுத்தண்டில் இருக்கும் டிஸ்குகள் நீரை இழப்பதால் அளவில் சுருங்கு கின்றன. நம் முதுகுத்தண்டில் தேன் கூடு வடிவத்தில் உள்ள எலும்புகளின் மையமான இடுப்பு மற்றும் கால்களில் அடர்த்தி குறைகிறது. எலும்புகளின் சுருங்கும் தன்மை லேசாக நிகழ்கிறது. தசை களின் நிறை குறைவதால் உயரம் மேலும் குறை கிறது. எலும்புகளின் வடிவம் மற்றும் அளவு தசைகள் அவற்றின் மீது விசை செலுத்தப்படும் விதத்தைப் பொறுத்து அமைகிறது. “இந்த செயல்முறையை தடுத்து நிறுத்த முடி யாது. ஆனால் தாமதப்படுத்தலாம். கால்சியம், வைட்டமின் டி அதிகம் உள்ள உணவுகளை உண்ணுதல், பளு தூக்கி உடற்பயிற்சி செய்தல், சிறிய வயதில் இருந்தே புகையிலை மற்றும் ஆல்கஹாலைத் தவிர்த்தல் போன்றவற்றின் மூலம் எலும்பு மற்றும் தசைகளின் நிறை குறை வதை தாமதப்படுத்தமுடியும். நல்ல நிலையில் உட்காருதல், நிற்றல் போன்றவையும் உயரழ்ம் குறைவதைத் தடுக்கும். வயதாக வயதாக நாம் ஒவ்வொருவரும் குட்டையாகிறோம் குட்டையாவது ஒன்றும் கெட்டது இல்லை. வயதாக வயதாக நாம் ஒவ்வொருவரும் குட்டை யாகிறோம். என்றாலும் குறிப்பிடத்தக்க எலும்பு மற்றும் தசைகளின் நிறை குறைவது இதய செயலிழப்பு, எலும்புப்புரை (osteoporosis), முது மையில் ஏற்படும் மூட்டு அழற்சி (osteoarthritis), பிற இணைப்பு மற்றும் இடம் விட்டு இடம் நகர்வது போன்ற நாட்பட்ட பாதிப்பு களை ஏற்படுத்துகிறது. அதனால் இந்த பிரச்சனைகளைத் தடுக்க நம்மால் முடிந்தவரை நாம் முயற்சி செய்ய வேண்டும்” என்று டைலர் கூறுகிறார். ஆரோக்கிய மான உணவும் உடற்பயிற்சியும் நலமாக நாம் வாழ முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இது வலியுறுத்துகிறது.</p>
