அரசாணையை மறந்த அதிகாரிகளால் மக்கள் கவலை
4 Mar 2026, 5:01 pm
<p><strong>அரசாணையை மறந்த அதிகாரிகளால் மக்கள் கவலை</strong></p>
<p>ஈரோடு, மார்ச் 4- புறம்போக்கு பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்கப்படும் என்ற அரசாணையை அதிகாரி கள் மறந்ததால், பொது மக்கள் பட்டா பெற திண்டாடி வருகின்றனர். ஈரோடு - முத்தூர் சாலை யில், வெண்டிபாளையம் பகு தியில் சாலை புறம்போக்கு நிலம் உள்ளது. இப்பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வேலாயம்மாள் என்பவர் குடிசை கட்டி, தனித்து வாழ்ந்து வருகிறார். குடும்ப அட்டை, ஆதார், வாக்கா ளர் அட்டை போன்ற ஆவணங்களைப் பெற் றுள்ளார். அத்துடன் மின் இணைப்பும் பெற் றுள்ளார். பட்டியலினத்தை சேர்ந்த இவ ருக்கு, இந்த வீட்டைத் தவிர வேறு எந்த இடத்திலும் வீடோ, வீட்டிடமோ இல்லை. இத னிடையே, அப்பகுதியில் வசிக்கும் ஆதிக்க சக்தியின் தூண்டுதலால், வேலாயம்மாள் வீடு ஆக்கிரமிப்பு என்றும், அதனை காலி செய்ய வேண்டும் என்றும் நெடுஞ் சாலைத்துறை அறிவிப்பு வெளியிட்டது. இத னால் மனமுடைந்த வேலாயம்மாள் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரின் உதவியு டன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் தார். அதில், நீண்டகாலமாக நெடுஞ்சாலைத் துறை புறம்போக்கு நிலத்தில் குடியி ருந்து வாழும் எளிய மக்களை அப்புறப்படுத் தாமல், அரசாணைப்பட்டி வீட்டு மனைப் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், காவல் துறையினருடன் செவ்வாயன்று அங்கே சென்ற வருவாய்த் துறை, நெடுஞ்சாலைத் துறையினர், ‘தாங் களாக வீட்டை காலி செய்யவில்லை என் றால், அரசு நிர்வாகம் ஆக்கிரமிப்பை அகற் றும்’ என்றும், ‘அதற்கான செலவு தொகையை தங்களிடம் வசூலிக்கப்படும்’ என்றும் எச்சரிக்கை விடுத்தனர். தொடர்ந்து புதனன்று, அங்கு சென்ற அரசு அலுவலர் கள், 15 நாட்கள் கெடு விதித்ததுடன், மொடக் குறிச்சி வட்டாரத்தில் வேறு இடம் வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்டவரிடம் விண் ணப்பம் பெற்று சென்றுள்ளதாக கூறப்படு கிறது. இவ்வாறு ஆக்கிரமிப்பை அகற்றுவ தில் தீவிரமாக உள்ள அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் கொடுத்த மனு மீது எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்தோ, ஆக்கிரமிப்பு அனுபவ உரிமையை நிரூபித்தால், பட்டா வழங்கலாம் என்ற அரசாணையையும் பற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை.</p>
