தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஜல் ஜீவன் திட்ட சோதனை ஓட்டத்தால் வீணாகும் குடிநீர் சாலைகளில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரால் மக்கள் அவதி

2 Jan 2026, 3:33 pm
ஜல் ஜீவன் திட்ட சோதனை ஓட்டத்தால் வீணாகும் குடிநீர்  சாலைகளில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரால் மக்கள் அவதி
<p><strong>ஜல் ஜீவன் திட்ட சோதனை ஓட்டத்தால் வீணாகும் குடிநீர் &nbsp;சாலைகளில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரால் மக்கள் அவதி</strong></p> <p>மதுரை, ஜன. 2 &ndash; மதுரை மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் &nbsp;குடிநீர் வழங்கும் பணிகள் கடந்த ஐந்தாண்டுகளாக நடைபெற்று வருகின்றன. பல பகுதிகளில் இத்திட்டம் சுமார் 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது முன் சோத னை &nbsp;பணிக்காக குழாய்களில் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனால், இந்த சோதனை ஓட்டம் குறித்து பொதுமக்களுக்கு முன் அறிவிப்பு இல்லாததால், தினசரி ஒரு மணி நேரத்திற்கு மேல் தண்ணீர் குழாய்களில் வந்தாலும், பயன்பாட்டுக்கு வராத நிலையில் தெருக்களில் வீணாக வழிந்து ஓடுகிறது. இதனால் பல பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் தேங்கி, பொதுமக்கள் நடந்து செல்ல முடி யாமலும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்ல முடி யாமலும் கடும் அவதிப்படுவதாக அப்பகுதி மக்கள்,வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். குழாய் பதிப்பு பணிகளில் அலட்சியம் &ndash; சாலைகள் சேதம் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் பல இடங்களில் சரிவர மூடப்படாமல் உள்ளது. கசிவு ஏற்பட்ட பகுதிகளில் ஊற்று போல தண்ணீர் வெளியேறி வரு வதாகவும் மக்கள் புகார் தெரி வித்துள்ளனர். &nbsp;மேலும், சரியாக மூடப்படாத பள்ளங்களால் சாலைகள் முழுவ தும் சகதியாக காட்சியளிப்பதுடன், ஏற்கனவே குண்டும் குழியுமாக உள்ள சாலைகள் மேலும் &nbsp;சேத மடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பொறியாளர்கள் கண்காணித்து சரி செய்திடுக: கவுன்சிலர்கள் இதுகுறித்து சில மாமன்ற உறுப்பினர்களிடம் கேட்ட போது,&ldquo;சோதனை ஓட்டத்திற்காக வே தண்ணீர் திறந்து விடப்படு கிறது. ஆனால்,பல இடங்களில் குழாய்கள் உடைந்து சாலை களைப் பெயர்த்துக்கொண்டு தண்ணீர் வெளியேறுகிறது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தொடர்ந்து தண்ணீர் வீணாகி வருகிறது. சில இடங்க ளில் மட்டும் தற்காலிகமாக சரி &nbsp;செய்யப்படுகிறது. இதனை பொறி யாளர்கள் நேரடியாக கண்கா ணிக்க வேண்டும் .சோதனை ஓட்டத்தின் போது, சம்பந்தப்பட்ட பகுதி பொறியாளர்கள் நேர டியாக களத்தில் இருந்து, எந் தெந்த இடங்களில் கசிவு ஏற்படு கிறது. எந்த குழாய்கள் சேத மடைந்துள்ளன என்பதை அப்பகுதி மக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்க ளிடம் கேட்டறிந்து, உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் வலியு றுத்தினர். இவ்வாறு தொடர்ந்து தண்ணீர் வெளியேறினால், சாலைகள் மேலும் சேதமடைவதோடு, குடிநீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் குடிநீர் வீணாகும் அபாயம் அதிகரிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். செல்லூர் &ndash; கோச்சடையில் &nbsp;அதிக பாதிப்பு குறிப்பாக செல்லூர், கோச்ச டை &nbsp;டோக் நகர் உள்ளிட்ட பகுதிக ளில், &nbsp;பல இடங்களில் குழாய்க ளில் இருந்து தண்ணீர் தொடர்ந்து வெளியேறி வருவதாகவும், இதனால் மக்கள் கடும் அவ திக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நிர்வாகத்துக்கு மக்கள் கோரிக்கை ஜல் ஜீவன் திட்டத்தின் சோதனை ஓட்டப் பணிகளை விரைவில் முடித்து, குழாய் கசிவு களை முழுமையாக சீரமைத்து, &nbsp;தோண்டப்பட்ட பள்ளங்களை உட னடியாக மூடி, முறையான, திட்ட மிட்ட நேர அட்டவணையுடன் குடிநீர் விநியோகம் செய்ய மாநக ராட்சி நிர்வாகம் உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி யுள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.