சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் மக்கள் அவதி!
14 Feb 2026, 4:33 pm
<p><strong>சாலையில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் மக்கள் அவதி!</strong></p>
<p>கடலூர், பிப்.14- பண்ருட்டி நகராட்சியில் கிடைப்பில் போடப்பட்ட கழிவுநீர் கால்வாய் பணியால் கழிவுநீர் சாலையில் தேங்கியதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், பண்ருட்டி நக ராட்சிக்கு உட்பட்ட திருவதிகை குட்டை தெருவில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்க நகராட்சியில் டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக மற்றொரு பகுதியில் கழிவுநீர் கால்வாய் மூடப்பட்டது. இதனால் சாலையில் கழிவுநீர் தேங்கி பொதுமக்கள் கொசு தொல்லையால், நோய் தொற்றால் அவதி அடைந்து வந்தனர். மேலும் கழிவு நீர் ஆங்காங்கே சாலை யில் தேங்கி நின்றதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சனிக்கிழமை சாலையில் வாகனத்தை நிறுத்தி பண்ருட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பண்ருட்டி - கடலூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொட ர்ந்து நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கழிவு நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்ப தாகவும், இனிமேல் தேங்காமல் பார்த்துக் கொள்வதாகவும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலந்து சென்றனர்.</p>
